Thursday, August 8, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 6: மாமன்னர் ராஜேந்திர சோழ தேவர் ( கி பி 1012 - 1044 )

நம்மை அதிகமாக பலவீனப்படுத்துபவரை காணும் பொழுதெல்லாம் நமக்கு கோபம் வருவது இயல்பான ஒரு விஷயம்.
ஆனால் இங்கே நடப்பது என்ன ?? பல நூற்றாண்டுகளாக மக்களை மனதளவில் மிகவும் பலவீனப்படுத்தும் ஒருவரை நம்மால் ஒரு நிமிடம் கூட புறந்தள்ள முடியாவில்லையே, ஏன் ? காரணம் பலவீனப்படுத்த அவர் கையாண்ட ஆயுதம் அன்பு , பத்தி மற்றும் மக்கள் பாதுகாப்பு போன்ற வலிமையுள்ள ஆயுதங்கள்....
இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தும் கலை சிறிது சிறிதாக அனுபவத்தின் மூலம் ஒரு சிலர் அடைகின்றனர். கருவில் தோன்றும் முன்னரே எண்ணங்கள் மூலம் இதனை அடைந்து , எண்ணங்கள் கருவில் உருப்பெற்று , கரு குழந்தையாக வானவன் மாதேவியின் வயிற்றிலிருந்து உதித்த.... திருவாதிரை நட்சத்திரம் இன்று...
ஓர் அழகிய முழு நிலவு நாளில் அர்ச்சுனன் காட்டில் பிறந்த போது காடுகள் சிலிர்த்ததாக மகாபாரதத்தில் கூறுகின்றனர்....
இதை எத்தனை பேர் அனுபவத்தில் உணர்ந்து இருப்பார்கள் என்பது நம்மால் கூற இயலாது, ஆனால்.....
பத்தாம் நூற்றாண்டில் ஒர் ஆடி மாதத்தில் உன்னதமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஒரு குழந்தையைப் பார்த்து , காடுகள் மட்டுமல்ல, நாடுகளும் சேர்ந்து சிலிர்த்துதான் இருக்கும். இந்நற்சகுனங்களை அந்நாளில் உள்ள பெரும்பாலான மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
வேங்கையின் மைந்தன் பிறந்தான்........
அந்தக் குழந்தைதான் உலக அளவில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த, அன்பு , பணிவு அதீதமான துணிச்சலுடன் கூடிய வீரம் , மகா கலாரசனைத் தன்மை மற்றும் சிறந்த தெய்வ பக்தியும் கொண்ட மாமன்னர் கோபரகேசரி உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்.....
இன்றும் மீன்சுருட்டியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் திரும்பியவுடன் சில கண நேரத்தில்
நம் கண்கள் ஈரமாகி மனதை பலவீனப்பட வைத்துவிட்டுத்தான், எழிலை ரசிக்க வைக்கிறது,
இந்த கங்கைகொண்ட சோழபுரம் .... நம்மில் பெரும்பாலோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்....
வாழ்க மாமன்னர் ராஜேந்திர சோழ தேவர் ( கி பி 1012 - 1044 )

No comments:

Post a Comment

Popular Posts