Thursday, August 8, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:8 - கும்பகோணம்_மரபுநடை

காவியங்கள் கதைக்கும்
'குடமுருட்டி'யின் சிறப்புகள் ஏராளம். சோழ வரலாற்றின் மிகவும் சிறப்பு மிக்க பகுதி குடந்தை .
இயற்கை அன்னை சற்று பூரித்தே காணப்படும் குடந்தை,
"சோழ வள நாடு சோறுடைத்து" என்பதற்கேற்ப பல பசுமையான வயல் வெளிகளும், நீர்நிலைகளும் , வாழை மற்றும் தென்னந்தோப்புகளும் கொண்ட வனப்பு மிக்க ஊர் இந்த குடந்தை.
அதுமட்டுமா மிக பிரம்மாண்டமான கோயில்களையும் , அதனுடைய பல நெடிய வரலாற்றுப் பக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள நகரம் குடந்தையாகிய கும்பகோணம்.
இங்குள்ள கோயில்கள் நம்மோடு அழகாக உறவாடும்,சிற்பங்கள் அழகிய கதைகள் சொல்லும் , சிலைகள் வார்த்தையாடும், குறுஞ்சிற்பங்கள் ரகசியம் பேசும், பூதங்கள் நம்முடன் குதூகலித்து மகிழும், மாடக்கோயில்களில் சுவர்கள் கூட வரலாற்றையும் எடுத்துரைக்கும்.
புராணக் கதைகளைப் பேசி நம்மை பிரமிக்க வைக்கும் கோபுரங்கள் மாமன்னர்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும். கல்வெட்டுக்கள் நமது பழைய மரபினை பறைசாற்றும்.
பல்லவ , சோழ , பாண்டிய பேரரசர்கள் மற்றும் முத்தரைய, வேளிர், பழுவேட்டரையர்,மழவரையர் போன்ற சிற்றரசர்களின் வரலாற்றைத் தன்னகத்தே புதைத்து வைத்துக் கொண்டு அழகாக விளங்குகின்றது. பல பேரரசுகளின் மாற்றங்களையும் தனக்குள் கொண்டுள்ள இந்தக் குடந்தை மாநகர கோயில்களையும் மற்றும் கோயில்கள் சொல்லும் வரலாற்று சிறப்புமிக்க செய்திகளையும் அறிந்து கொள்ள
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" மற்றும் "செலிபரேட் காஞ்சி " நண்பர்கள் மரபு நடை ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர்.
பக்தி , சிற்பச் சிலைகள் , வரலாறு மற்றும் இயற்கை வனப்பின் பூரிப்பை அறிந்து கொள்ள....
நாமும் இணைவோம்......
மரபை அறிய.......

No comments:

Post a Comment

Popular Posts