பட்டடக்கல், கர்நாடகா........
கார்மேகங்கள் வெண்முத்துக்கள்
தூவுவதை சற்றே நிறுத்தி இருந்த நேரத்தில் , மர இலையில் தஞ்சம் புகுந்த நீர்த்திவலைகள் லேசாக நம்மீது பாய்ந்து வந்து பரவசப்படுத்திய , அதே நேரத்தில், மலர்ந்திருந்த பூக்களின் நறுமணத்தையும் ஈரப்பதத்தையும் சுமந்து வந்த காற்று நம்மை இன்பமாக அழைத்துச் செல்ல,

செந்நிற நிலத்தில் விழுந்த நீர் திவலைகள் சிறு ஓடைகளாக சென்று ஆற்றில் கலந்ததால் , ஆற்றின் நீரோட்டம் ஏறக்குறைய குழம்பிய செந்நிற நீராக ஓடிக் கொண்டிருக்க ........ அருகே
பசுமைக்குச் சற்றும் பஞ்சமில்லாத ஆற்றங்கரையின் மேற்குப் புறத்தில் மிகப்பெரிய வளாகத்தில் சிறியதும் ,பெரியதுமாகவும், குட்டை நெட்டையுமாகவும் வளர்ந்திருந்தன பல அழகிய கட்டடங்கள்.
ஆம்,சற்று வித்தியாசமான நாகர மற்றும் திராவிட கட்டடக் கலைகளுடன் ஒன்றிணைந்து சாளுக்கிய கட்டடக்கலை அழகுடன் மிளிரும் பரிணாம வளர்ச்சி பெற்ற கட்டடக் கலை கோயில்கள்.
இந்தப் பெரிய வளாகத்தில் நிறைய கோயில்கள் இருந்தாலும் குறிப்பிடும்படியாக எட்டு கோயில்கள் உள்ளது , இங்குள்ள அனைத்து கோயில்களுமே சிவனை முழுமுதற்கடவுளாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டில் தொடங்கிய சாளுக்கியப் பேரரசு ...
முதலாம் புலிகேசி (544 - 567),
முதலாம் கீர்த்திவர்மன் (567 -592),
மங்களேசன் (592 -610),
இரண்டாம் புலிகேசி (610 - 642)
முதலாம் கீர்த்திவர்மன் (567 -592),
மங்களேசன் (592 -610),
இரண்டாம் புலிகேசி (610 - 642)
காலம் வரை பல உன்னதமான கட்டடங்களை வரலாற்று மற்றும் கலை உலகத்திற்கு தந்துள்ளது. இவை தற்போதுள்ள வடக்கு கர்நாடகத்தில், பால்கோட் மாவட்டத்தில் ஐஹோளே மற்றும் பாதாமி என்ற ஊர்களில் காணப்படுகின்றது. கலையழகு மிக்க இந்த கோயில்கள் மற்றும் குடைவரைகளை காட்டிலும் பட்டடக்கல் உள்ள கோயில்கள் கலை நுணுக்கத்தில் ஒரு படி மேலே என்று சொல்லும் படியாக அமைந்துள்ளது.
கிபி 642 ஆம் ஆண்டு பல்லவ பேரரசின் தலைசிறந்த அரசரான
நரசிங்க போத்தரசர்(630 -668) , சாளுக்கியப் பேரரசின் மாமன்னரான இரண்டாம் புலிகேசியுடன் வாதாபியில் போரிட்டு வென்றாதால் சற்று காலம் சாளுக்கிய அரசு வலிமை குன்றியதாக இருந்ததும்,
அதற்குப் பிறகு
முதலாம் விக்ரமாதித்தன்(655 - 680) , விஜயாதித்தன்( 696 - 734) மற்றும்
இரண்டாம் விக்ரமாதித்தன் (734 - 745) காஞ்சியை வென்றனர் என்பது நாம் அறிந்ததே . இந்த வெற்றியின் நினைவாக நிறுவப்பட்ட நினைவுச் சின்னங்களே பட்டடக்கல்லின் கலை அம்சங்கள்.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மிகப்பெரிய இந்த வளாகத்தின் தென்மேற்கு மூலையில் வழியாக உள்ளே நுழையும் பொழுது ,அழகான பாதைகளும் , பாதைக்கு அருகில் மணம் வீசும் பூக்களைக் கொண்டு செடிகளும், செடிகளுக்கு அருகில் அளவாக மற்றும் அழகாக பராமரிக்கப்பட்ட புல்வெளிகளும் நம்மை வரவேற்று கோயில்களுக்கு அருகில் அழைத்துச் செல்கின்றது.
காடசித்தேஸ்வரர் திருக்கோயில் :
முதலில் காடசித்தேஸ்வரர் திருக்கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் , கருவறை மற்றும் முகப்பு மண்டபம் கொண்ட அழகிய சிறிய நாகர அமைப்பில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயிலின் முகப்பு மண்டபத்திற்கு முன்னே இரண்டு அழகிய துவாரபாலர்கள் காவல் புரிகின்றனர். கருவறையின் வாயில் மகரதோரணத்தின் மத்தியில் சிவன் பார்வதியும் , இடது புறத்தில் விஷ்ணு மூர்த்தியும், வலது புறத்தில் பிரம்மாவும் இருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.
வெளிப்புற சுவர் முழுவதும்
பிரஸ்தரத்திற்கு சற்று கீழே அழகிய பூத வடிவ புடைப்புச் சிற்பங்களும், கோஷ்டத்தில்
சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற அழகிய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
பிரஸ்தரத்திற்கு சற்று கீழே அழகிய பூத வடிவ புடைப்புச் சிற்பங்களும், கோஷ்டத்தில்
சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற அழகிய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
ஜம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் :
இந்தக் கோயிலுக்கு வடக்கே ஜம்புலிங்கேஸ்வரர் என்ற ஏறக்குறைய காடசித்தேஸ்வரர் அமைப்பை கொண்ட ஒரு சிறிய கோயிலும் நாகர கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது . இந்தக் கோயிலும் கருவறை கோபுரத்தில் சிவன் மற்றும் பார்வதியின் நடனக்கோலம் அற்புதமாக கவனத்தை ஈர்க்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
காளகநாதர் திருக்கோயில் :
இந்தக் கோயிலுக்கு சற்று முன்னே காணப்படுவது காளகநாதர் திருக்கோயில். மற்ற இரண்டு கோயில்களை விடவும் சற்றே பெரியதான இந்த கோயில் கருவறையை சுற்றி வர பாதை ஒன்று இருந்தபோதும் பெருமளவில் சிதைந்து காணப்படுகின்ற இந்த கோயிலின் கருவறை முகப்பில் நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜரின் புடைப்புச் சிற்பம் ஒன்றையும் காணலாம். இந்தக் கோயிலின் இன்றைய நிலையைக் காணும் பொழுது, இது பெரிய கோயில் ஆகவே இருந்திருக்க வேண்டும் என்றும் , ஏதோ காரணத்தினால் பாதிக்கு மேல் அழிந்தது என்பதையும் கண்கூடாக காண முடிகிறது. இந்தக் கோயிலின் வடக்குப் புறத்தில் ஒரு சிறிய மண்டபத்தை , எட்டு கைகளுடன், வசீகரிக்கும் வீணை நாதர் புடைப்புச் சிற்பம் ஒன்று அலங்கரிக்கின்றது.
சந்திரசேகரர் திருக்கோயில் :
இந்தக் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள மிகச் சிறிய கருவறையை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோயில் சந்திரசேகரர் கோயில். கருவறைக்கு எதிரே சிதிலமடைந்த நந்தி மண்டபமும் , கருவறை மட்டுமே கொண்டுள்ளது இந்த கோயில்.
சங்கமேஸ்வரர் திருக்கோயில் :
அடுத்து இந்த வளாகத்திலேயே, பழமையாக கோயிலாக கருதப்படும் சங்கமேஸ்வரர் திருக்கோயில். பல தூண்களை கொண்ட பெரிய முகப்பு மண்டபமும் ஒரு அழகிய கருவறையும், கருவறையைச் சுற்றி பாதையும், பல அழகிய சாளரங்களையும் கொண்டு திராவிடக் கட்டடக் கலை முறையில் அமைக்கப்பட்ட, ஏறக்குறைய முழுமையான அதாவது சற்று குறைவாக சிதிலமடைந்த கோயிலாகக் காணப்படுகின்றது.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை முகப்பில் இரண்டு கம்பீரமான துவாரபாலகர்கள் காவல் காத்திருந்த பொழுதும், உள்ளே உள்ள சங்கமேஸ்வரர் லிங்க வடிவம் உடைந்து நமது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை முகப்பில் இரண்டு கம்பீரமான துவாரபாலகர்கள் காவல் காத்திருந்த பொழுதும், உள்ளே உள்ள சங்கமேஸ்வரர் லிங்க வடிவம் உடைந்து நமது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
கோஷ்டத்தில் பல இடங்களில் புடைப்புச் சிற்பம் செதுக்கும் பணியை எந்த காரணத்தினாலோ பாதியில் கைவிட்டுள்ளனர்.
இந்தக் கோயிலின் வெளிப்புறத்தை சுற்றி வரும்போது , சிவனின் பல்வேறு தோற்றங்களும்,விஷ்ணு மூர்த்தியின் சில அவதாரங்களும் சிற்பமாக செதுக்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிற்பத்தின் இடையிலும் காணப்படும் சாளரங்கள் வெவ்வேறு வடிவ நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கோபுரத்தில் பல பூதங்களின் சேஷ்டைகள், குரங்கு , யானை, யாழி மற்றும் குதிரை போன்றவற்றின் புடைப்புச் சிற்பங்களும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு அழகு படுத்தியுள்ளனர்.
காசி விஸ்வநாதர் திருக்கோயில் :
இதற்கு அடுத்தாற்போல் காணப்படுவது நாகர அமைப்பில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில். பல நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட இந்த கோயில்,
கருவறை மற்றும் முகப்பு மண்டபத்தை கொண்டுள்ளது. முகப்பு மண்டபத்தில் உள்ள தூண்களில் பல புராணக் கதைகள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் நுழைவாயிலில் அழகிய பெண்களின் வடிவங்கள் சிற்பமாக வடிவமைக்கப்பட்டு, மகரதோரணத்தில் கருடன் இரண்டு பாம்புகளின் வாலைப் பிடித்துள்ளது போன்றும், பாம்புகளின் தலை வாயிலில் கீழ்ப்புறத்தில் உள்ளது போன்றும் வடிவமைத்துள்ளனர். ராவணேஸ்வரன் கயிலை மலையை தூக்கும் காட்சி மிகச் சிறிய புடைப்பு சிற்பமாக ஒரு தூணில் காணப்படுகின்றது.
உத்தரத்தில் சோமாஸ்கந்தர் ரிஷபத்தில் அமர்ந்திருப்பது போன்றும், அவரை சுற்றி பல பூதகணங்களும் மற்றும் பல்வேறு அழகிய சிற்பங்களும் நுணுக்கமாக செதுக்கியுள்ளனர். இந்தக் கோயிலின் கருவறை கோபுரத்திலும் கிழக்குப் புறம் நோக்கி நடராஜர் நடனமிடும் அழகிய சிற்பம் உள்ளது.

இதற்கு அடுத்தாற் போல் உள்ளது மல்லிகார்ஜுனா மற்றும் விருபாக்ஷா திருக்கோயில்கள்.
இந்த ஒவ்வொரு கோயிலும் , தனித்தனியாக நம்மை அந்த இடத்தை விட்டு அசையாமல் நிறுத்தி வைக்கக் கூடிய தகுதியுடைய கோவில்களாகவே கொள்ளலாம் .....
பல கலை அம்சங்களும், புராணக்கதைகள் கொண்ட நுணுக்கமான சிற்பங்களையும் பல முக்கியமான வரலாற்று பக்கங்களை உள்ளடக்கிய இந்த கோயில் வளாகம் உலக கல்வி, அறிவியல் மற்றும் பாரம்பரிய குழுவின்(UNESCO) மூலம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
#காடசித்தேஸ்வரர்_திருக்கோயில்#ஜம்புலிங்கேஸ்வரர்_திருக்கோயில்,
#காளகநாதர்_திருக்கோயில், #சங்கமேஸ்வரர்_திருக்கோயில்,#சந்திரசேகரர்_திருக்கோயில் ,#காசிவிஸ்வநாதர்_திருக்கோயில்
#விருபாக்ஷ_திருக்கோயில் ,
#மல்லிகார்ஜுன_திருக்கோயில் , #இரண்டாம்_விக்ரமாதித்தன் ,#இரண்டாம்_கீர்த்திவர்மன் ,
#வாதாபி ,#சாளுக்கியப்_பேரரசு ,
#பட்டடக்கல் , #இராவணன்,
#புடைப்புச்_சிற்பம்
#வரலாற்றுப்_பயணங்கள்
#chalukya_architecture

No comments:
Post a Comment