Thursday, August 8, 2019

வீணைநாதர்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
திருநாவுக்கரசர்
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .
இந்த அழகிய மணப்பாறையில் ஆன ராஜசிம்ம போத்தரசருடைய சிற்பங்களுக்கு இந்த பாடல் பொருத்தமாக இருக்கின்றது அல்லவா🙂🙂

No comments:

Post a Comment

Popular Posts