Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள்45:உலகளந்த பெருமாள்,இராஜசிம்மேஸ்வரம்

பூலோக கையிலாயம் என்று வர்ணிக்கப்படுகின்ற கோயில்களில் ஒன்றான , கச்சிப்பேடு பெரிய கற்றளி என்றும் இராஜசிம்மேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்ற காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள விஷ்ணு மூர்த்தியின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரத்தை தத்ரூபமான மணப்பாறைகளால் ஆன சிலைகளின் மூலம் நாம் காணலாம்...
மூன்றடி மண் கேட்ட சிறுவன் ஒருவன் சிரித்த முகத்துடன் ஒரு கையில் குடையும் ,ஒரு கையில் மகாபலியிடம் இருந்து தானம் பெறும் சிறிய (வாமண) உருவ சிலை,
தானம் பெற்ற பிறகு விஸ்வரூபம் எடுத்த வாமணன் ,ஒரு அடியினால் பூமியும், மற்றும் ஒரு அடியால் ஆகாசத்தையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து, அவருக்கு முக்தி அளித்த உலகளந்த பெருமாள்.இந்தப் புராண நிகழ்ச்சியை அற்புத சிலைகளாக பல்லவ சிற்பிகள் வடிவமைத்துள்ளார்கள்.

சிரித்த முகத்துடனும் ஒரு கையில் குடையுடனும், ஒரு கையை தானத்திற்காக ஏந்தி நிற்கும் வாமணன் மற்றும் தானம் அளிக்க தயாராக கையில் கமண்டலத்துடன் மகாபலி சக்கரவர்த்தி
உலகளந்த பெருமாள்

No comments:

Post a Comment

Popular Posts