Tuesday, December 24, 2019

வரலாற்றுப்_பயணங்கள்: 29 வீரநாராயணசுவாமி_திருக்கோயில், பெலவாடி ,

வீர நாராயண சுவாமி திருக்கோயில், பெலவாடி.
நடந்து சென்றாலும் லேசாக புழுதியை வாரி இரைக்கும் சாலைகளைக் கொண்ட பழமை மாறாத ஒரு அழகிய ஊர் பெலவாடி.....
ஹொய்சாள பேரரசின் தலைநகராக விளங்கிய ஹளிபேடிலிருந்து ஒரு காத தூரத்தில் அமைந்துள்ள இவ்ஊரில் முதலாம் வீர நரசிம்மன் (1152 -1173 ) மன்னனின் மகன் , தக்ஷின சக்கரவர்த்தி இரண்டாம் வல்லாளன்(1173 - 1220) காலத்தில் கட்டப்பட்ட வீரநாராயண திருக்கோவில் ஹொய்சாள கட்டடக்கலையின் மற்றுமொரு சான்றாக கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது....
பெரும்பாலும் ஓட்டு வீடுகளால் சூழப்பட்டுள்ள இத்திருக்கோவில் விஷ்ணு மூர்த்தியை மையமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது .
மற்ற சில ஹொய்சாள கட்டிடக் கலையுடன் அமைந்த கோயில்களுக்கு ஒப்பிட்டால் சற்றும் குறையாத பல நுணுக்கமான சிற்பங்களை உடைய இந்த திருக்கோவிலும் மக்னீசியம் சிலிகேட் எனப்படும் சோப்புக் கற்களாலலேயே கட்டப்பட்டு இருக்கின்றது. ஆகையால் நாம் எதிர்பார்ப்பது போல பல குறுச்சிற்பங்களையும், சிறிய சிறிய புடைப்புச் சிற்பங்களையும் கோயிலின் அனைத்து சுவர்களிலும் காணமுடிகிறது....
கிழக்குப் புற வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் முழுமையாக சிதிலமடையாத அழகிய திருக்கோயிலை காண முடிந்த மகிழ்ச்சியோடு கொடிமரத்தை கடந்து உள்ளே சென்றால், வடக்குப் புறத்தில் கையில் புல்லாங்குழலுடன் வேணுகோபால சுவாமி கோயிலும் , அதற்கு நேர் எதிரில் யோக நரசிம்மருக்கு ஒருதனி கோயிலும் அமைந்துள்ளது. இவ்விரு கோயில்களும் அழகிய மண்டபத்தின் மூலம் இணைக்கப்பட்டு ,அந்த மண்டபம் கிழக்குப் புறமாக சென்று 8 அடி உயரத்தில் அமைந்துள்ள வீரநாராயண சுவாமியின் கருவறை உடன் இணைகிறது...
இணைக்கும் மண்டபங்கள் முழுவதிலும் கடைந்தெடுக்கப்பட்ட பல வகையான அழகிய தூண்களையும் , தூண்கள் இணையும் விதானத்தில் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ள புடைப்புச் சிற்பங்களையும் காணலாம்...
வெப்பமான நேரத்தில் இந்தக் கோயில் மண்டபத்தினுள் நுழையும் பொழுது ,குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையில் நுழையும் உணர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் , அமர்ந்து ஓய்வெடுக்க சிறிய சிறிய திண்ணைகளும் அமைத்திருக்கின்றனர். மண்டபங்களின் ஓரங்களில் காணப்படும் கைப்பிடிச்சுவர் போன்ற அமைப்பில் களிறு மற்றும் புரவிகளின் போர் காட்சிகளை தத்ரூபமாக சிற்பமாக செதுக்கி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நோக்கினால், பதிமூன்றாம் நூற்றாண்டில் அமைந்த கவித்துவமான, அழகிய , நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், தத்ரூபமான சிலைகள் சூழ்ந்த ஒரு அழகிய வைஷ்ணவ திருக்கோயில்.🙂🙂🙂

புல்வெளிகளும் பூக்களும் கொஞ்சும் வீர நாராயணர் திருக்கோயில்
பெலவாடி வீரநாராயணப் திருக் கோயிலின் ஒரு பகுதி

இரண்டு யானைகள் வரவேற்கும் திருக் கோயிலின் முகப்பு மண்டபம்


துவாரபாலகர்களாக நின்று காவல் புரியும் களிறுகள்

வீர நாராயணர் திருக்கோயில்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் பெலவாடி வீர நாராயண திருக்கோயில்

கோவிலின் அழகிய முகப்பு மண்டபம்

இரண்டு வேழங்கள் காவல் புரிய வளைந்து வளைந்து செல்லும் சுற்றுச் சுவரை உடைய வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் ஒரு பகுதி
ஒரு இடம்கூட இடைவெளி இல்லாமல் பல்வேறு புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுற்றுச்சுவர் மற்றும் கோபுரம்..... இதில் விஷ்ணுபுராணம் மட்டுமல்லாமல் சமண தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பமும் அலங்கரிப்பதை காணலாம்
சுற்றுச்சுவரின் புடைப்புச் சிற்பங்கள்




கிருஷ்ண லீலா

மகாவிஷ்ணு

கோதண்டராமன்

பலவகையான தூண்களைக் கொண்ட மண்டபம்

கோயில் உள்ளிருந்து வெளியே தெரியும் எழில் மிகு தோற்றம்

நீள வாக்கில் துல்லியமாக கடைந்து எடுக்கப்பட்டு , திண்ணையின் மீது அமைக்கப்பட்டுள்ள கூர்மையான இதழ்களைக் கொண்ட தூண்🙂

அளவிலும் சற்றும் விட்டுக் கொடுக்காமல், அழகிலும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் அமைக்கப்பட்டுள்ள விதானம்...

வேணுகோபால சுவாமி, யோக நரசிம்ம ஸ்வாமி மற்றும் வீர நாராயண சுவாமி கருவறைகளை இணைக்கும் பல அழகிய தூண்களைக் கொண்ட குளுமையான மண்டபம்

மலர்ந்த உடன் மந்தகாசத்தை ஏற்படுத்தும் அழகிய கோபுரத்தை கண்ட மகிழ்ச்சி பூரிப்பில் செம்பருத்..தி.....

பல திண்ணைகளுடன் அமைந்துள்ள கருவறைகளை இணைக்கும் மண்டபம்...

சற்று சிதிலமடைந்த போதிலும் கம்பீரத்துடன் காட்சியளிக்கும் வேழம்
விஷ்ணு மூர்த்தியின் அவதார புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுற்றுச்சுவர்

கம்பீரமாக காவல் புரியும் முரட்டு யானைகள்

விஷ்ணு அவதார புடைப்புச் சிற்பங்கள்

ஒரு யானையின் கழுத்து வழியாக தெரியும் மற்றொரு யானை

விஷ்ணு மூர்த்தியின் வராக அவதார புடைப்புச் சிற்பம
மலர்கள் , செடிகள் , மரம் மற்றும் புல்தரை யுடன் இயற்கை எழில் கொஞ்சும் வீர நாராயணர் திருக்கோயில்


No comments:

Post a Comment

Popular Posts