காவிரி ஆற்றுத் தீவில் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் ஸ்ரீரங்கப்பட்டணா ,
ஒன்பதாம் நூற்றாண்டில்(கிபி 894) மேலைகங்க அரசின் படைத் தலைவர்களில் ஒருவரான திருமலைய்யா என்பவரால் ஸ்ரீரங்கநாதர் கோயில் கட்டப்பட்டது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் (1108 - 1152 )என்பவரால் புனரமைப்பு செய்யப்பட்டு ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியார் #இராமானுஜருக்கு பாடசாலை அமைப்பதற்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது,
பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டாம் வீர வல்லாளன் என்ற ஹோய்சாள மன்னராலும் பிறகு வந்த விஜயநகர பேரரசர்களாலும் இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கநாதர் கோயில் பஞ்சரங்க கோவில்களில் ஒன்று.
இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது லஷ்மி தேவி,பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.
கர்ப்பகிரகத்தில் இருந்து வெளியே வரும்போது உள்சுற்றில் நரசிம்மர், கிருஷ்ணர் ,அனுமன் ,கருடன், பிரம்மா ஆழ்வார்களுக்கு என்றும் சிறிய சிறிய நேர்த்தியான முறையில் வேலைப்பாடுகளுடன் கூடிய தனித்தனியாக கோயில்கள் உள்ளது.
கோவிலின் உள்ளே பெரும்பாலும் ஹோய்சாள கட்டடக்கலையின் பிரதிபலிப்பே அதிகமாக உள்ளது.
கோயிலின் ராஜ கோபுரமும், வெளிச்சுவரும் விஜயநகரப் பேரரசர்களின் கட்டுமானங்களாக தெரிகிறது.
மரத்தால் ஆன அழகிய ஒரு தேர் , விஷ்ணு மூர்த்தியின் அனைத்து அவதாரங்களுடனும் ராமாயணம் மகாபாரதம் சில காட்சிகளுடனும் மிக அழகாக வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக நிற்கிறது.
(((பஞ்சரங்க கோயில்கள் :
ஸ்ரீரங்கநாதர் கோயில்
- ஸ்ரீரங்கப்பட்டணம்
- ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் - திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோயில் - கும்பகோணம்
அப்பக்குடத்தான் பெருமாள்
திருக்கோவில் - திருப்பேர்நகர் (திருச்சி)
திருக்கோவில் - திருப்பேர்நகர் (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோயில் - மயிலாடுதுறை. )))
No comments:
Post a Comment