அழகிய அந்தி மங்கும் வேளையில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் சில புகைப்படங்கள்.
அத்திமர காடாக இருந்த இந்த இடத்தில் ஒரு சிறு குன்றில் அமைந்துள்ள வரதராஜ பெருமாளை திருமங்கையாழ்வார் அத்தியூரான் என்று மங்களாசாசனத்தில் போற்றுகிறார் .
முதலாம் குலோத்துங்க சோழனும் விக்கிரம சோழனும் இந்த கோயிலை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இதனை இந்த கோயில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
கருணாகரத் தொண்டைமான் துணைவியும் இந்த கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் காணலாம்.
கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரெண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாலான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.
இங்குள்ள தாயார் சன்னதியின் படிக்கட்டில் அச்சுதராயரும், கிருஷ்ணதேவராயரும் தங்கள் துணைவியாருடன் வருபவர்கள் அனைவரின் பாதங்களும் தங்கள் தலை மீது படுமாறு சிறு சிலையாக வணங்கி நிற்கின்றார்கள்
மேலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிரம்பிய இந்த கோயில் வைணவ திவ்விய தேசத்தில் 31வது கோயிலாகும்..
தென்னகத்தில் உள்ள திருவேங்கடம் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக சிறப்புமிக்க வைணவத் தலமாகவும் கருதப்படுகிறது.
நன்றி: #செலிபரேட்_காஞ்சி
கல்யாண மண்டபத்தில் இருந்து இரண்டாவது சுற்று கோபுரமும் கொடிமரமும்
இரண்டாம் சுற்று கோபுரம் கொடிமரம்
கருடாழ்வார் உலகளந்தான் மகாவிஷ்ணு கோகுல கண்ணன்
கல்யாண மண்டபத்தின் மூலையில் அமைந்துள்ள கற்சங்கிலி
ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் உள்ள குளம்
சக்கரத்தாழ்வாரின் தனி சன்னதி
சக்கரத்தாழ்வாரின் கோபுரத்தில் லேசாக முத்தமிடும் கற்சங்கிலி
வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் காணப்படும் அழகிய தோற்றம்
அஷ்டபுஜ பெருமாள்
உலகளந்த பெருமாள்
தன் அத்தனை காதலையும் தன் காதலன் கன்னத்தில் தன் கையில் ஸ்பரிசத்தினால் உணர்த்தும் நங்கை.....
கோபியர்களின் உடைகளை எடுத்து மரத்தின் மீது அமர்ந்திருக்கும் கண்ணன்
பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைத்த பிறகு அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அமுதம் பகிர்ந்தளிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு மூர்த்தி
அச்சுத தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
மேற்கூரையில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள், விஷ்ணு மூர்த்தியின் பல்வேறு அவதாரங்கள், பறவைகளின் அழகிய தோற்றம்.
ஸ்ரீ ராமானுஜர்
No comments:
Post a Comment