கூரம்,வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் மற்றும் ஆதிகேசவப் பெருமாள்...
சாதாரணமாக வயல்களின் வனப்பை கூட்டி காட்டுவது வரப்பும், வரப்பின் அருகிலுள்ள நண்டு வளைகளும் , வளையில் இருந்து வெளியே வந்து நம்மை பார்த்து நாணி உள்ளே செல்லும் நண்டுகளும், வயல்களில் ஒய்யாரமாக காலூன்றி கொண்டிருக்கும் கொக்குகளும், களை எடுக்கப்பட்ட வயல்வெளியில் ஏறக்குறைய சமமாக உயரத்தில் நிற்கும் நெற்பயிர்களும் தானே . இத்தகைய ரம்மியமான காட்சியை பார்க்கும் பொழுது மனம் லேசாகி நம்மை பரவசப்படுத்துகிறது....🌾🌾🌾
மரங்களிலேயே மிகவும் அகலமாக வளரக்கூடிய மரம் ஆலமரம், மிகவும் அடர்த்தியான இலைகளையும் ,நிறைய நிறைய பழங்களையும், அகலத்திற்கு ஏற்ப தன்னை தாங்கிக்கொள்ள விழுதுகளை வேரூன்றும் மரம் ஆலமரம்..... இதே மரம் தை மாத ஆரம்பத்தில் தன் இலைகளை எல்லாம் உதிர்த்து இளவேனிற் காலத்திற்கு தயாராக நிற்கும். அந்நேரத்தில் மரத்தினடியில் ஏறக்குறைய இரண்டு மூன்று அங்குலம் உதிர்ந்த இலைகள் மரத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே தவமிருக்கும்..🌿🌿🌿
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திற்கு அருகே வெள்ளை கேட் என்னுமிடத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர் சென்று இடது புறமாக ஒரு ஐந்து கிலோமீட்டர் சென்றால் கூரம் என்ற அழகிய பசுமையான கிராமத்தை அடையலாம்.....
இந்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள அந்த வழிக் காட்சிகள் தான் நம்மை பரவசத்துடன் அழைத்துச் சென்றது...
ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியும் வரை மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஊராக திகழ்ந்துள்ளது கூரம் கிராமம்.
முதலாம் பரமேஸ்வர பல்லவர் முதல் இரண்டாம் குலோத்துங்க சோழன் வரை உள்ள மன்னர்களின் வேறுபட்ட வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.....
வாதாபி கொண்ட நரசிங்க பல்லவ போத்தரசரின்(630 - 668)பேரனும் , இரண்டாம் மகேந்திரவர்மன்(668 -672) மகனுமான முதலாம் பரமேஸ்வரவர்மன்(672 -695) காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலாகும்.
பிற்காலத்தில் ராஜசிம்மேஸ்வரம் என்னும் கலை பொக்கிஷமான ஒரு கற்றளியை எடுப்பித்த இரண்டாம் நரசிம்மவர்மன் (700 - 728)என்று அழைக்கப்பட்ட ராஜசிம்மன் இவரது மகன் ஆவார்.
பிற்காலத்தில் ராஜசிம்மேஸ்வரம் என்னும் கலை பொக்கிஷமான ஒரு கற்றளியை எடுப்பித்த இரண்டாம் நரசிம்மவர்மன் (700 - 728)என்று அழைக்கப்பட்ட ராஜசிம்மன் இவரது மகன் ஆவார்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயில் கஜபிருஷ்ட அமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றது. இக்கோயில் சிறிய மூல மண்டபம் , அதற்கடுத்து சிறிய அர்த்த மண்டபமும் ,அதற்கு அடுத்து உள்ள மகா மண்டபம் சற்று பெரியதாக உள்ளது . எனினும் இக் கோயில் சிறிய கோயிலாகவே உள்ளது. நான் சென்றிருந்த நேரத்தில் சதுர அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் மீது மேற்கு சூரியனின் ஒளி இலேசாக பட்டுக் கொண்டிருந்தது.
10 அங்குலம் ஒரு நூல் நீளமும் மற்றும் மூன்றே கால் அங்குலம் அகலமுடைய 8 தகடுகள் கொண்ட #கூரம்_செப்பேடு நமக்கு பல்லவர்களின் வம்ச வழியையும் , சிறப்பையும் தெரிவிக்கின்றது...
இதில் முதல் இரண்டு தகடுகள் இறைவன் பரமேஸ்வரனையும் வாழ்த்தி புகழ்கின்றது, மூன்றாவது செப்பேடு பல்லவர்களின் வம்சாவழியை ...
பிரம்மன் - அங்கிரஸ் - பிரஹஸ்பதி - பரத்வாஜர் - துரோணர் - அஸ்வத்தாமன் - பல்லவர் என இவ்வாறாக விவரிக்கிறது.
பிரம்மன் - அங்கிரஸ் - பிரஹஸ்பதி - பரத்வாஜர் - துரோணர் - அஸ்வத்தாமன் - பல்லவர் என இவ்வாறாக விவரிக்கிறது.
பரமேஸ்வரா-மங்கலம் என்ற கிராமத்தை பரமேஸ்வர (அதாவது பரமேஸ்வரவர்மன் I.), மன்னர் தன் பெயர் தாங்கிய கிராமத்தை , இருபத்தைந்து பாகங்களாக பிரித்து . இவற்றில் மூன்று பாகங்களை இரண்டு பிராமணர்களான அனந்தசிவாச்சாரியார் மற்றும் புல்லசர்மா ஆகியோர் தெய்வீக சடங்குகளை நிகழ்த்தி சிவன் கோயிலினை பராமரித்து வந்தமைகாக ஆண்டு அனுபவித்து வர தானமாக அளிக்கபட்டதாக குறிக்கபட்டுள்ளது.
நான்காம் பகுதி கூரம் மண்டபத்திற்கான தண்ணீர் மற்றும் நெருப்பை வழங்குவதற்கான ஒதுக்கி வைத்தது, இந்த மண்டபத்தில் பாரதத்தை வாசித்து வருவதற்காக ஐந்தாவது பாகமும்,மீதமுள்ள இருபது பாகங்கள் இருபது சதுர்வேதிகளுக்கு வழங்கப்பட்டன.
என்றும் குறிக்கின்றது.
என்றும் குறிக்கின்றது.
'பரமேஸ்வரவர்மன் பிறர் உதவியின்றி பல இலக்கம் வீரர்களைக் கொண்ட விக்கிரமாதித்தனை கந்தையை சுற்றி ஓடும்படி செய்தான்' என்று கூரம் பட்டயம் கூறுகிறது.
மேலும் இவ்வரசன் பெருவளநல்லூரில் நடந்த போரில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படைகளை முறியடித்தான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது.
மேலும் இவ்வரசன் பெருவளநல்லூரில் நடந்த போரில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படைகளை முறியடித்தான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது.
இக்கோயிலிலே தமிழகத்தின் முதல் கட்டுமான கற்கோயிலாக கருதப்படுகின்றது.
இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் சிவன் சற்றும் பொலிவு குறையாமல் உள்ளார்...
இந்த ஊரில் மேலும் ஒரு சரித்திர புகழ்பெற்ற ஆதிகேசவப் பெருமாள் என்ற ஒரு விண்ணகர கோயிலும் உள்ளது , இந்த கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றுடன் தொடர்புடையது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்க சோழன்(1133 - 1150) சிறந்த சிவ பக்தன், இருப்பினும் வைணவர்களை சமமாக நடத்தாமல் , சம காலத்தில் வாழ்ந்த ராமானுஜருடன் மனக்கசப்பை கொண்டிருந்தார்.
இந்த மனக்கசப்பின் விளைவாக ராமானுஜர் சோழ நாட்டை விட்டு விலகிச் சென்றார் என்றும், இரண்டாம் குலோத்துங்க சோழனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ராமானுஜரின் சீடர்களில் ஒருவனான ஆழ்வான் என்ற ஒருவரது கண்கள் பறிக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது. அந்த ஆழ்வானின் சொந்த ஊர் இந்தக் கூரம் கிராமமாகும்.
இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலின் வெளிச்சுற்றுச் சுவரில் ஒட்டினார் போல் தெற்கு நோக்கியவாறு கூரத்தாழ்வாருக்கு அழகிய கோயில் ஒன்றும் உள்ளது .
கூரத்தாழ்வார் சன்னதி தெற்கு நோக்கி இருக்க, இச்சன்னதியில் வைணவ ஆச்சாரியர்களின் சிறிய சிறிய கோயில்கள் கிழக்கு நோக்கி அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி கேசவப்பெருமாள் சன்னதி கிழக்கு திசை நோக்கி இருக்கிறது. பெரிய கோயில்.
சக்கிரதாழ்வார், நரசிம்மர், பங்கஜவல்லி தாயார், ஆண்டாள்,கருடன் மற்றும் ஆழ்வார்கள் சன்னதிகள் உள்ளன.
சக்கிரதாழ்வார், நரசிம்மர், பங்கஜவல்லி தாயார், ஆண்டாள்,கருடன் மற்றும் ஆழ்வார்கள் சன்னதிகள் உள்ளன.
வரலாற்று சிறப்பு மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கிராமத்தை.......🙂🙂🙂🙂
- மாலை மங்கும் வேளையில் சூரியன் தன் அக்கினிச் சுடர்கள் எல்லாம் பூமி மீது வீசிவிட்டு மறையும் நேரத்தில், வயல்வெளியில் பாய்ச்சப்பட்ட நீரும் அந்தச் சூட்டை சற்றே உறிஞ்சி லேசான இளம் சூட்டில் ஒரு மிருதுவான , நெற்கதிர் மற்றும் மண்ணின் வாசத்தை நமக்கு அள்ளித் தருகிறது......🌾🌾🌾
- போது ஏற்படும் ஓசை நமது வயதை குறைத்து பழங்கால நினைவுகளில் நம்மை அசைபோட வைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை...... அவ்வாறு நடக்கும் போது மனதில் ஒரு குறுகுறுப்பும் ஏற்படுகிறது. காரணம் ...சிறுவயதில் கோடை விடுமுறையின் போது பகல் நேரம் முழுவதுமே ஆலமரத்தடியில் நாங்கள் கழித்து இருக்கிறோம்....
- மரத்தடியில் உள்ள திண்ணையில் தாயம் ,கல்லாங்காய் ,நொண்டி விளையாட்டு, கிட்டிப்புள் விளையாட்டு , ஐஸ் பாய் என்று சொல்லப்படும் ஒளிந்து விளையாடும் விளையாட்டு, மட்டைப்பந்து விளையாட்டு, விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது, கோலி மற்றும் இப்படி நிறைய விளையாட்டுகள் விளையாடி இருக்கிறோம்.....🙂🙂🙂🙂
- வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம்
- சிதிலமடைந்த நிலையில் உள்ள சிலை கோயிலின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கிறது , இது எவருடைய சிலை என்று சரியாக தெரியவில்லை, பிரம்மாவாக இருக்கலாம் என்று என் யூகம்.
- கஜபிருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ள கோயிலின் பின்புறம்
- தெற்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் நுழைவாயில்
- கூரத்தாழ்வார் கோயிலின் மூல கோபுரமும் அர்த்த மண்டப மேற்கூரையும்
- கூரத்தாழ்வார் கோயிலின் மூல கோபுரம்
- கல்லினால் ஆன தூங்கா விளக்கு , மேலே ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் போன்ற அமைப்புடன் காணப்படுகிறது
- கூரத்தாழ்வார் தனி சன்னதி
- ஸ்ரீவத்சங்கரர் என்ற கூரத்தாழ்வார் , இராமானுஜரின் முதன்மைச் சீடர் ஆவார், இவர் கூரம் என்ற கிராமத்தில் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்து வந்தவர் , வைஷ்ணவர்களுக்கும் ஏன் உயிர்களுக்கும் அன்னதானமிட்டு தன் மொத்த செல்வத்தையும் தானமாக அளித்தவர். காஞ்சி வரதர் மீது தீராத பக்தி கொண்ட இவர் ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் என்ற நூலில் எழுதியுள்ளார் இது மட்டுமல்லாமல் வேறு 6 வடமொழி நூல்களையும் இயற்றியுள்ளார். இவரது மகன்கள் வியாச பட்டர் மற்றும் பராசர பட்டர், இவர்களில் பராசர பட்டர் என்பவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு நாமத்திற்கு ஒரு உரை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள நான்கு கால் மண்டபம்
- ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள்
- உணவளிக்கும் அன்னை பூமியின் பசுமையான வனப்புமிக்க காட்சி
No comments:
Post a Comment