நவநரசிம்மர் கோயில்கள்
திருசிங்கவேள் குன்றம் (அஹோபிலம் )
இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்னூல் என்று ஆந்திராவில் உள்ள ஒரு ஊரில் வேலை விஷயமாக நானும் எனது நண்பர் கோபியும் சென்றிருந்தோம் .திரும்பி வரும் வழியில் அஹோபிலம் செல்லலாம் என்று ஒரு சிறிய ஆசை .
ஒருநாள் மதியவேளையில் அங்கு சென்று சேர்ந்தோம் .
சற்று தடுமாறிப்போனோம்.
ஒன்பது நரசிம்மர் கோயில்கள் உள்ளதாக கேள்விப்பட்டு அங்கு சென்று பார்க்க ஆவலுடன் சென்றபோது சற்று ஏமாற்றமே . அங்குள்ள அனைத்து வரைபடங்களும் தெலுங்கில் இருந்தது.
அங்குள்ளவர்களிடம் விவரம் கேட்டாலும் வணிக நோக்குடன் பதில் வந்தது .
ஒருநாள் மதியவேளையில் அங்கு சென்று சேர்ந்தோம் .
சற்று தடுமாறிப்போனோம்.
ஒன்பது நரசிம்மர் கோயில்கள் உள்ளதாக கேள்விப்பட்டு அங்கு சென்று பார்க்க ஆவலுடன் சென்றபோது சற்று ஏமாற்றமே . அங்குள்ள அனைத்து வரைபடங்களும் தெலுங்கில் இருந்தது.
அங்குள்ளவர்களிடம் விவரம் கேட்டாலும் வணிக நோக்குடன் பதில் வந்தது .
எப்படியோ ஒருவழியாக அனைத்து நரசிம்மர் கோயிலில் நல்லபடியாக பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பினோம் .
திரும்பியவுடன் ஒரு எண்ணம், ஒன்பது நரசிம்மர் கோயிலுக்கு லட்சுமி நரசிம்மர் என்ற கீழ்ஆஹோபிலக் கோயிலிலிருந்து செல்லும் வழியை பற்றி அறிந்த தகவல்கள் அளிக்கும் ஒரு சிறு முயற்சி.
"கருட கிரி" என்றும் "திரு சிங்கவேள்" குன்றம் என்றும் அழைக்கப்படும் அஹோபிலம் கர்னூல் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. கடப்பாவில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது .
சற்றே விட்டுவிட்டு மலைத்தொடராக காணப்படும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு பகுதியாக இந்த அஹோபில காடு உள்ளது. ஆம் இது காடுதான். இங்கு நிறைய குரங்குகளும், மான்களும், மயில்களும் , வெள்ளை மாடுகளும் சிறுத்தைப் புலியும்,கரடியும் உள்ளதாக கூறுகிறார்கள்.
சில இடங்களில் பறவைகளையும், மான்களையும் காணமுடிந்தது. மேலும் சில இடங்களில் கரடிகளின் கால் தடங்களும், சிறுத்தைப்புலியின் கால் தடங்களும் காணமுடிந்தது.
சில இடங்களில் பறவைகளையும், மான்களையும் காணமுடிந்தது. மேலும் சில இடங்களில் கரடிகளின் கால் தடங்களும், சிறுத்தைப்புலியின் கால் தடங்களும் காணமுடிந்தது.
மிக பிரம்மாண்டமான ராஜகோபுரங்களுடன் கூடிய கோயில்களை பார்த்த நமக்கு இங்கு உள்ள ஒன்பது நரசிம்மர் கோயில்களும் சிறிய கோயிலாகவே தோன்றும், இருப்பினும் பார்த்தவுடன் மனதைக் கவரும் விதமாக அமைந்துள்ளது ஒரு அதிசயம்தான்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் வராங்கலில் ஆட்சி செய்த காகத்திய வம்சத்தின் கட்டுப்பாட்டிலிருந்த குறுநில மன்னர்களாலும், பிற்பாடு பதினான்காம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விஜயநகர பேரரசர்களாலும் இங்குள்ள கோயில்கள் கட்டப்பட்டு மற்றும் புனரமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டுகள் கீழ் அஹோபில லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் காணலாம்.
அழகிய நளினமான சிற்ப வேலைப்பாடுகளும் பிரம்மாண்டமான மண்டபங்களும் உள்ள சிறப்பான கோயில் கீழ் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்.
கீழ் அஹோபிலத்தில் இருந்து மேல் அஹோபிலத்திற்கு எட்டு கிலோமீட்டர் நாம் நம் வாகனத்தின் மூலம் எளிதாக செல்லலாம் .அது ஒரு அழகிய இலையுதிர் காலம் என்பதால் இந்த சாலை முழுவதும் உதிர்ந்த இலைகளால் போர்த்தப்பட்டு, லேசான இலை சருகுகளின் ஓசையுடன் இந்த தார் சாலை நம்மை வரவேற்கிறது. மந்தை மந்தையாக மந்திகளின் கூட்டமும் வரவேற்கிறது.
இந்த வழியே ஒரு சில கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மலைபாதையில் செல்லும் பொழுது ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறமாக ஒரு பசுமையான தோட்டம் ஒன்றால் சூழப்பட்ட ஒரு நரசிம்மர் கோயில் உள்ளது, இது கரஞ்ஜ நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நரசிம்மர் முகத்தில் லேசாக புன்னகையுடனும் கையில் வில் ஏந்தியும் அழகியசிங்கராக அமர்ந்திருக்கிறார்.
இங்கிருந்து அதே மலைப்பாதையில் மூன்று கிலோமீட்டர் மேலே சென்றால் மேல் அஹோபிலம் அடையலாம். வாகனத்தில் அதற்குமேல் செல்ல இயலாது . அங்கிருந்து 60 படிகள் ஏறிச்சென்றால் அஹோபில நரசிம்மர் என்று அழைக்கப்படும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட சற்றே பெரிய ஒரு கோயிலை நாம் அடையலாம். இக்கோயிலில் முன்னும் பின்னும் இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் உள்ளது .மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய நரசிம்மர் சிலை ஒன்றும் அதற்கு எதிரே மிகச்சிறிய அளவிலான ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஒரு சிவலிங்கத்தையும் காணலாம். இது ஏறக்குறைய மலைக்குகைக்குள் அமைந்தது ஆகவே காணப்படுகிறது . இங்கு லஷ்மி தேவிக்கு தனி சன்னதி ஒன்று உள்ளது. இந்த கோயிலைச் சுற்றி சிறிய சிறிய மண்டபங்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.
இப்போது தான் நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத அந்த அனுபவம் எங்களுக்கு ஆரம்பித்தது அதாவது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மலையேறும் ஒரு வாய்ப்பு அஹோபில நரசிம்மர் கோவிலுக்கு பின்னால் மரப்பாலத்தின் வழியாக சென்றால் ஒரு நூறு கால் காலாட்ஷேப மண்டபம் உள்ளது, அதையும் சற்று கடந்து மீண்டும் ஒரு மரப் பாலத்தின் வழியாக ஒரு சிறிய ஆற்றைக் கடந்து அந்தப் புறம் சென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வராஹ நரசிம்மர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலும் மலைக் குகையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளதாகவே உள்ளது . நாம் உள்ளே செல்லும் போது சற்று தலை குனிந்தே செல்ல வேண்டும் அந்த அளவு சிறிய குகை. இங்கு வராகர் பூதேவியை தோள்மீது சுமந்து ஒரு காலை ஆதிசேஷன் மீது வைத்துக் கொண்டு அழகாக காட்சியளிக்கிறார்.
இங்கிருந்து காற்றாற்றின் கரடுமுரடான கரை வழியாக இன்னும் மூன்று கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து அதற்குமேல் ஏறக்குறைய 500 படிக்கட்டுகளில் ஏறி சென்றால் ஜ்வாலா நரசிம்மர் பெருமாளின் குகை உள்ளது.( மொத்தம் நான்கு கிலோமீட்டர்)
இந்த மலைக் குகையில் ஒரு தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்படும் காட்சியும் அவரை பக்த பிரகலாதன் வணங்கும் காட்சியாக ஒரு சிலையும்,
அருகில் கருட பீடத்தில் அமர்ந்து இரண்யனை மடியில் அமர்த்தி அவன் வயிற்றை கிழிக்கும் நரசிம்மர் ஒரு சிலையும், அதற்கு அருகில் இரண்யனும் நரசிம்மரும் சண்டையிடும் காட்சி ஒரு சிலையாகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அருகில் கருட பீடத்தில் அமர்ந்து இரண்யனை மடியில் அமர்த்தி அவன் வயிற்றை கிழிக்கும் நரசிம்மர் ஒரு சிலையும், அதற்கு அருகில் இரண்யனும் நரசிம்மரும் சண்டையிடும் காட்சி ஒரு சிலையாகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் அருகே செந்நிற பாறைகளுடன் கூடிய சிறிய சுவையான சுனைநீர் உள்ளது.
இந்தக் குகைக்கு செல்லும் வழியில் ஒரு 20 அல்லது 25 அடிக்கு முன்னால் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி சுமார் 100 அடி உயரத்திலிருந்து நம் பாதையை போர்த்தினாற்போல கீழே ஏறக்குறைய 200 அடி சென்று விழுகிறது. இது அற்புதமான காட்சியாக அமைந்திருக்கும், ஏனென்றால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் செல்லும் போது அங்கே நீர் இல்லை .
இக்கோயிலில் இருந்து திரும்பி வரும் வழியில் 100 அடி அளவில் இடதுபுறமாக ஒரு மூன்று கிலோமீட்டர்கள் மலையேறி சென்றால் உக்கிர ஸ்தம்பம் என்று அழைக்கப்படும் நரசிம்மர் தூணைப் பிளந்து வெளியே வந்த தூண் உள்ளது. இந்த இடம் ஏறக்குறைய அஹோபில மலையின் உச்சியில் உள்ளது.
உக்கிர ஸ்தம்பத்திலிருந்து 3 கிலோ மீட்டர் காட்டு வழியாக இறங்கி மேலும் ஐநூறு படிக்கட்டுகள் இறங்கி ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றால் மாலோல நரசிம்மரை தரிசிக்கலாம், மாலோலன் என்றால் மகாலட்சுமியின் மீது காதல் பித்து பிடித்தவர் என்று அர்தமாம். மகாலக்ஷ்மியை காதலியாக பெற்ற நரசிம்ம மூர்த்தி சற்று காதல் பித்துப்பிடித்திருப்பது பெரும் வியப்பில்லை அல்லவா.....🙂
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரகலாதன் கல்விகற்ற சிறிய மண்டபம் ஒன்று உள்ளது.
மாலோல நரசிம்மர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் கீழே இறங்கி வந்தால் நாம் மீண்டும் வராக நரசிம்மர் கோயிலை அடையலாம் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் கீழே இறங்கி நாம் மேல் அஹோபிலம் வாகன நிறுத்தும் இடத்தை அடையலாம் .
இந்த இடத்திலிருந்து ஒரு ஜீப் வாகனத்தின் உதவியால் கீழ் அஹோபிலம் செல்லும் வழியில் ஏழு கிலோ மீட்டர் அளவில் வலதுபுறமாக 2 கிலோ மீட்டர் காட்டுப் பாதையில் சென்று மீண்டும் ஒரு கிலோமீட்டர் கால்நடையாக மலைப்பாதையிலும்(ஆகமொத்தம் 10 கி.மீ) படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் பார்கவ நரசிம்மர் கோயில் உள்ளது,
இந்தக் கோயிலின் அருகில் அழகிய படித்துறை அமைக்கப்பட்ட பெரிய குளம் ஒன்று உள்ளது.
இந்தக் கோயிலின் அருகில் அழகிய படித்துறை அமைக்கப்பட்ட பெரிய குளம் ஒன்று உள்ளது.
கீழ் அஹோபிலத்தை அடைந்து லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இடதுபுறமாக இரண்டு கிலோமீட்டர் சென்றால் நமக்கு வலதுபுறத்தில் சத்ரவட நரசிம்மர் கோயிலைக் காணலாம் ...
இந்த சத்ரவட நரசிம்மர் கோயிலில் இருந்து வெளியே வந்து சாலையின் வலது புறமாக ஒரு கிலோ மீட்டர் சென்றால் யோகானந்த நரசிம்மர் கோயில் வருகிறது ,
பிரகலாதனுக்கு யோகத்தை உபதேசித்த யோகானந்த நரசிம்மர் .
பிரகலாதனுக்கு யோகத்தை உபதேசித்த யோகானந்த நரசிம்மர் .
சத்ரவட நரசிம்மர் கோயிலும் யோகானந்த நரசிம்மர் கோவிலும் வாகனத்தின் உதவியால் எளிதில் சென்று வரலாம்.
யோக நரசிம்மர் கோயிலிலிருந்து ஒரு முட்காடு வழியாக ,மிகவும் கரடுமுரடான ,ஜீப் வாகனம் மட்டுமே செல்லக்கூடிய ஒரு காட்டுப் பாதையில் ஏறக்குறைய 15 அல்லது 20 கிலோ மீட்டர் பயணம் செய்து பாவன நரசிம்மர் கோயிலை அடையலாம். இந்தப் பாதையில் பயணிக்கும் போது சுவாரசியமான சில விலங்குகளின் கால் தடங்களும், வித்தியாசமான பறவைகளும் , அடர்ந்த தோகையுடன் கூடிய மயில்களையும் நாங்கள் கண்டோம்.
சுண்ணாம்பு பாறைகளாலான இந்த மலையின் வாகனங்கள் சென்று சென்று ஏறக்குறைய துகள் வடிவில் சுண்ணாம்பு முகமெங்கும் படர்ந்து நம்மை அழகுபடுத்தி வரவேற்பு அளித்தது.🙂🙂
இந்த இடத்திற்கு அஹோபில வரதர் கோயிலின் பின்புறம் சென்று வலதுபுறமாக 8 கிலோமீட்டர் கால்நடையாகவும் காட்டு வழியே வர முடியும். வரும் வழியில் ஒரு சில பூர்வகுடி மக்களின் செஞ்சுலட்சுமி அம்மனுக்கு பலியிடும் பலிபீடத்தையும் காண முடியும்.
#செஞ்சுலட்சுமி திருமணத்திற்கு முன்பு அலங்காரம் செய்து கொள்ள சென்ற ஒரு சிறிய குகையும் அதற்குப் பிறகு நரசிம்மரை திருமணம் செய்துகொண்ட பாவன நரசிம்மர் கோயிலும் மிகவும் சிறப்பானது...
ஏறக்குறைய இரண்டு நாட்கள் இந்த ஒன்பது நரசிம்மர் கோயில்களையும் ,
கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயிலையும் காண தேவைப்படுகிறது.
கீழ் அஹோபிலத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயிலையும் காண தேவைப்படுகிறது.
அஹோபிலத்தில் தங்கிய இரண்டு நாட்களில் நாங்கள் உணவுக்காக செலவு செய்த பணம் மொத்தம்
நூறு ரூபாய்க்கு குறைவாகவே இருக்கும்.
நூறு ரூபாய்க்கு குறைவாகவே இருக்கும்.
இங்கு உள்ள மடங்களில் இலவசமாக உணவு அளிப்பதே இதற்கு காரணம்.
ஒட்டுமொத்தமாக அஹோபிலம் சென்று வந்த அனுபவம் ஒரு சிறந்த அனுபவமாகவே உள்ளது, அழகிய கலைநயத்துடன் கூடிய லஷ்மி நரசிம்மர் கோயில்,காட்டுப் பாதைகளில் பயணம் ஜீப் வாகனங்களில் மலைகளின் மீது பயணம் ,ஒரு சில காட்டு விலங்குகளை கண்டு மகிழ்ந்தோம்....
#நவநரசிம்மர்_கோயில்கள்
#அஹோபிலம்
#திருச்சிங்கவேள்_குன்றம்
#அகோபிலம் #Ahobilam
#கர்நூல்_மாவட்டம் #ஆந்திரா
#அஹோபிலம்
#திருச்சிங்கவேள்_குன்றம்
#அகோபிலம் #Ahobilam
#கர்நூல்_மாவட்டம் #ஆந்திரா
- அஹோபில நரசிம்மர் கோயில் முகப்பு மூலஸ்தான மற்றும் அம்மன் கோபுரம் மேல்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்
- ஆதவனால் தகதகக்கும் கொடிமரம்
- கரடுமுரடாக செல்லும் மலைப்பாதையின் ஒரு பகுதி
- உக்ர ஸ்தம்பம் ,இந்த தூணை நரசிம்மர் பிரகலாதனுக்காக தூணில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
- வழியில் சற்று ஓய்வு எடுத்து போது
- ஜ்வால நரசிம்மமூர்த்தி குகை
- பக்த பிரகலாதன் வணங்கி நிற்க தூணைப் பிளந்து கொண்டு வெளிவரும் நரசிம்மமூர்த்தி
- கீழே கருட பீடம் மேலே தன் மடியிலமர்த்தி இரணியனை வதம் செய்யும் நரசிம்மமூர்த்தி
- மற்றும் இரணியனும் நரசிம்ம மூர்த்தியும் சண்டை செய்யும் காட்சி
- ஜ்வால நரசிம்மர் கோயில்
- சிகப்பு நிற கற்பாறைகள் கொண்ட சுனை, இரணியன் வதத்திற்குப் பிறகு நரசிம்ம மூர்த்தி , தன் கைகளை இங்கே கழுவிய இடமென்று ஒரு நம்பிக்கை உண்டு
- ஏகாந்தமான ஒரு இடத்தில் பாறைகளில் நீர் ஓடி வரும் ஓசையும் பறவைகளின் ஓசையும்............ சொல்வதற்கு ஒன்றுமில்லை 🙂🙂🙂
- கந்தர்வர்களுக்கும் காட்சியளித்து அருள் பாவித்த சித்ரவட நரசிம்மர்
- சுண்ணாம்பு பாறைகளுக்கு இடையே தவழ்ந்து வந்த ஜீப்
- செஞ்சு தேவி குகை
- பார்கவ_நரசிம்மர் கோயில் அருகே உள்ள குளம்
- பாவன நரசிம்மர் கோயில் அருகில் உள்ள சிற்றுண்டி கடை🙂🙂
- செஞ்சுலட்சுமி
- பார்கவ_நரசிம்மர் கோயில் வழி
- மாலோல நரசிம்மர் கோயில்
- மாலோல நரசிம்மர் கோவிலின் துவாரபாலகர் அருகில் பயபக்தியுடன் மாலோல நரசிம்மரை வணங்கி நிற்கும் தம்பதிகள் இவர்களைப் பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை,ஒருவேளை இந்தப் பெண் மாலோலரைப் போல தன் கணவரும் தன் மீது காதல் பித்து பிடித்து இருக்க வேண்டும் என்று வணங்கியிருப்பரோ😜😜
- காட்டு மலைப்பாதை
- அடர்ந்த காடுகளுக்கு ஊடே ஒரு சிறிய ஓடையைக் கடக்க ஏற்படுத்தப்பட்ட மரப்பாலம்
- நூற்றுக்கால் மண்டபம்
- அஹோபில நரசிம்மர் கோயில் சிற்பம்
- லட்சுமி நரசிம்மர் கோயில் சிற்பம்
- லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தூண்களில் உள்ள அழகிய சிற்பங்கள்
- அஹோபில கோயில் அருகேயுள்ள கல்யாண மண்டபம்
No comments:
Post a Comment