சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சர்க்கார் பெரியபாளையம் திருப்பூர்
வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் கல்வெட்டுக்கள் அடங்கியுள்ள இந்த கோவில் ஏ எஸ் ஐ கட்டுப்பாட்டில் உள்ளது.
வரலாற்று ஆர்வலர்களும், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பக்தர்கள் காண வேண்டிய திருக்கோயில்..
இந்தக் கல்வெட்டு செய்தி இதில் உள்ளது
http://kongukalvettuaayvu.blogspot.com/20…/…/blog-post.html…
http://kongukalvettuaayvu.blogspot.com/20…/…/blog-post.html…
நன்றி : Govinth Raju
எழுத்து - #சதிஷ்விவேகா
கடந்த வாரத்தின் குரத்துக்குளி நாயனார் பதிவில் #நீர்_மேலாண்மை என்ற தலைப்பில் சுந்தர பாண்டியத் தேவர் ஆட்சி காலத்தில் சர்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் எவ்வாறு வேளாண்மை நடந்தது என்ற கல்வெட்டு செய்தியைப் பார்த்தோம்...
அக்கோவிலுக்கு அருகில் 450 ஏக்கரில் நஞ்சவராயன் ஏரி இருந்தது என்றும் அதை பேரூர் நாட்டின் செம்படவன் பார்த்துக் கொண்டதைப் பற்றியும் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டதைப் பற்றியும் பார்த்தோம். அப்பதிவைப் பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அந்த ஏரி எங்குள்ளது?என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டேன் ..
தெரியும் சதீஷ் .. இருக்கிறது .. இந்த குளத்திற்கு வேடந்தாங்கலில் எப்படி வெளிநாட்டு பறவைகள் வருகிறதோ அதேபோல் வருடாவருடம் இங்கும் வரும் என்றார் .. கோவிலிருந்து எவ்வளவு தூரம்? என்றேன் .. கூலிபாளையம் நால்ரோட்டிலிருந்து வடக்கே குன்னத்தூர் போகும் சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ளது என்றார் .. உங்களுக்கு நேரமிருக்கும் பொழுது என்னை அழைத்து போக முடிங்களா என்றேன் .. நிச்சியமாக என்றார்...
அடுத்தநாளே அதற்கான வாய்ப்பும் அமைந்தது ... நானும் அவரும் சென்றோம் .. அவ்விடத்திற்கு செல்லும் பொழுது மாலைநேரம் .. சாலையிலிருந்தே நஞ்சவராயன் குளத்தின் விஸ்தாரம் பிரம்மிப்பைத் தந்தது.. அருகே சென்றேன் கரையில் ஒரு பாழடைந்த கோவில் இருந்தது அதற்கு முன் மூன்று நான்கு வேல் நடப்பட்டிருந்தது காவல் தெய்வமாய் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே மேலும் கரையின் மேல் ஏறினேன் ..
ஏரியின் ஒரு மூலையிலிருந்து முழுமையும் பார்த்துக் கொண்டிருந்தேன் .. காலடியில் நீரோட்டத்தின் சலசலப்பு சத்தம் கேட்டு பார்த்தால் டாலர் சிட்டியின் சாபமான டையிங்லிருந்து வரும் சாயக்கழிவு நீர் ஏரியிலிருந்து வெளியேறும் நீரோடு கலந்து பயணித்தது .. கருப்பு நிறத்தில் நுரை ததும்பச் சென்றது ..
சமீபகாலமாக வருடந்தோறும் வரும் பறவையினங்களின் வருகையும் குறைந்து விட்டதாம்.. சமூக ஆர்வலர்கள் இப்பகுதியை தூய்மை செய்யவும் சாயக்கழிவு நீரை கலக்காமல் தடுக்கவும் இக்குளத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டியும் பலமுறை விண்ணப்பத்துள்ளார்கள் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற செய்தியையும் நண்பர் கூறினார்...
அன்று சுந்தர பாண்டியர் தானமாய் அளித்த நிலங்கள் பாதிக்கு மேல் கட்டிட காடுகளாகவும்.. செம்படவன் காத்த ஏரி சாயக்கழிவில் பொழிவிழந்து போய் விட்டதே என்று நினைத்து வருத்தம் தான் மேலிட்டது.. இன்னும் நஞ்சவராயன் ஏரியாவது மிஞ்சியிருக்கிதே என்ற சிறு சந்தோசத்தில் அவ்விடம் வந்தேன் ...
இவ்விடம் தூய்மை செய்யப்பட்டு சுற்றுலாத் தலமாக்கினால் ஏரியும், பறவையினங்களும் காக்கப்படுவதோடு அருகிலிருக்கும் சுக்ரீஸ்வரர் ஆலயம் இன்னும் வெளிச்சத்திற்கு வரும் ... இதன் தொன்மை அடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேரும் , நடக்கும் என்ற நம்பிக்கையுடன்.....
ஆவுடை நாயகி மற்றும் சுக்ரீஸ்வரர் சன்னதிகள்
அந்தி மயங்கும் வேளையில் சுக்ரீஸ்வரர் கோபுரம்
சுக்ரீவன் சிவலிங்கத்தை வணங்கும் சிற்பக் காட்சி
தனியாக எடுத்து பாதுகாக்கப்படும் சிலைகள்
சுக்ரீஸ்வரர் கோவிலின் முகப்பு
இரட்டை நந்திகள்
பூஜை முடிந்த பைரவர்
முருகப்பெருமான்
கோனேரின்மை கொண்டான் ஸ்ரீ வீரபாண்டியன்
சுந்தரபாண்டியன் கல்வெட்டு
No comments:
Post a Comment