Tuesday, December 24, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 30: பெருவுடையார்_திருக்கோயில்

போர் நடக்கும் இடங்களில் சில சமயம் அம்பு வருவதைப் பார்க்கும் கண்களின் இமைகள் மூடிக்கொள்ள கூட அவகாசம் கொடுக்காமல் அம்பு கண்ணை துளைத்து விடும் அளவிற்கு வேகமாக வருமாம். இது அந்த காலகட்டத்தின் எதார்த்தமான நிகழ்வு.....
தஞ்சாவூர் பெரியகோவிலின் முதல் மற்றும் இரண்டாவது நுழைவாயிலை கடந்து மூன்றாவது நுழைவாயிலுக்கு சற்று முன்னால் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஒரு மிகப்பெரிய அம்பு நம் கண் வாசலில் புகுந்து வினாடி நேரத்தில் மூளையை பிளந்து கண்களை ஈரமாக்கி விடுகிறது.....
அந்த மூன்றாவது வாயிலில் நுழையும் பொழுது, நாம் தான் ஏதோ இந்த பிரம்மாண்டமான கோயிலை கட்டினோம் என்ற திமிருடன் கூடிய நடை நமது கால்களுக்கும், கம்பீரமாக கோபுரத்தை நோக்கி கொண்டிருக்கும் நமது பார்வைக்கும் தானாகவே வந்து விடுகிறது . என்ன மாயமோ தெரியவில்லை....
தொண்டைமண்டலத்தானான எனக்கே இப்படி என்றால் , முதன்முதலில் குடமுழுக்கு முடித்து, இந்த கோவிலுக்குள் நுழைந்திருக்கும் "தஞ்சையர்க்கோன் ராஜராஜ பெருவேந்தன்" நடை எவ்வாறு இருந்திருக்கும்......🙂🙂🙂🙂









No comments:

Post a Comment

Popular Posts