கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாமல்லபுரத்திற்கு திரும்பும் வழியில்,நுழைவாயிலின் அருகில் சற்றே இடதுபுறத்தில் ASI யின் கம்பிவேலிக்கிடையில், மிக அழகான புல்வெளிக்கு நடுவில் ஐந்தடி ஆழத்தில் ஒரு கற்கோயில் காணப்படுகிறது , இது முகுந்த நாயனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ அரியணை ஏறி அமர்ந்த , தலைசிறந்த மன்னனான இராஜசிம்ம பல்லவன் ( 700 -728) காலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்னோடியாக விளங்கும் கச்சிப்பேடு பெரிய கற்றளி (கைலாசநாதர் கோயில்), மற்றும் மாமல்லபுரம் கடற்கரை கோயிலையும் கட்டியவர் இராஜசிம்ம பல்லவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் முகப்பில் ஒரு சிறிய மண்டபமும்,அதற்கு அடுத்த கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கமும், அதற்கு பின்னால் பல்லவரின் தனித்தன்மையுடன் கூடிய சோமாஸ்கந்தர் புடைப்பு சிற்பமும் உள்ள சிறிய அழகான கற்கோயில்.
இக்கோயில் கோபுரத்தின் நான்கு உச்சியிலும் சிறிய சிற்பங்களாக மேற்கில் யோகநரசிம்மரும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும்,கிழக்கில் கஜலட்சுமியும் மற்றும் தெற்கில் தச்சணமூர்த்தியும் அமர்த்துஆழகுபடுத்துகிறது.
ஆனால் கற்கலசம் அற்ற கற்றளி.
ஆனால் கற்கலசம் அற்ற கற்றளி.
இரண்டு அடுக்கு கொண்டு, முற்றுபெறாமல் உள்ள இக்கோயில் கோபுரம் முதல் அடுக்கு வரை கூடசால எனும் கோபுர அமைப்பைக்கொண்டுள்ளது.
பெரும்பாலும் மாமல்லபுரம் செல்பவர்கள் இந்த கோவிலை காண தவறவிட்டு இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்,
அடுத்த முறை செல்ல வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக காணவேண்டிய சிறிய அழகிய கோயில்..
அடுத்த முறை செல்ல வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக காணவேண்டிய சிறிய அழகிய கோயில்..
#முகுந்த_நாயனார்_கோயில்
#நரசிம்மபல்லவர்_2 (700 -728 )
#இராஜசிம்மபல்லவன்
#மாமல்லபுரம்
#மல்லைகுடைவரை
#கடல்மல்லை
#செலிபரேட்_காஞ்சி
#வரலாற்றுப்_பயணங்கள்
#நரசிம்மபல்லவர்_2 (700 -728 )
#இராஜசிம்மபல்லவன்
#மாமல்லபுரம்
#மல்லைகுடைவரை
#கடல்மல்லை
#செலிபரேட்_காஞ்சி
#வரலாற்றுப்_பயணங்கள்
- முகுந்த நாயனார் கோயிலின் மேற்கு புறத்தோற்றம்
- கோபுரத்தின் மேல் செதுக்கப்பட்ட யோக நரசிம்மர் சிலை
- கர்ப்பகிரகத்தின் பின்னாலுள்ள சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம்
- கோபுரத்தின் மேல் தோற்றம் உட்புறத்திலிருந்து
- நான்கு கரங்களுடன் நான்முகனும் ,நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரி மகாவிஷ்ணுவும்,
- சிறிய கந்தப்பெருமானை மடியில் அமர்த்தி சிவனின் அருகிலேயே அமர்ந்திருக்கும் பார்வதி தேவி..
- கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் சிவலிங்கம், பின்னால் சோமாஸ்கந்தர் பார்வதிதேவியுடனும்,விஷ்ணு மற்றும் நான்முகனுடனும்
No comments:
Post a Comment