Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள் :44-கந்தழீஸ்வரர்_திருக்கோயில்,குன்றத்தூர்


"மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே............"
முற்றுப்பெறாத தெற்கு நோக்கி அமைந்திருக்கும் கோபுரம.
தெய்வீக மணம்கமழக்கூடிய அழகிய பழமை வாய்ந்த கந்தழீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு எந்த கல்வெட்டும் தற்போது காணப்படவில்லை.
இக்கற்றளி எக்காலத்தில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை,
எனினும் கட்டுமானங்களை பார்க்கும்போது விஜயநகர பேரரசைத் ஞாபகப்படுத்துகின்றது. குன்றில் மேல் உள்ள முருகன் கோயில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருப்பதால் இக்கோயிலும் அந்த காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருக்கலாம்.
ஆனால் மூலஸ்தானத்தின் மேற்கூரையில் பாம்புகள் மீன்கள், நடன மங்கைகள் மற்றும் கோலாட்டம் போன்ற சிற்பங்கள் உள்ளது .
கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் பிள்ளையார், சிவலிங்கம், சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள் மற்றும் சூரியனுக்கு தனி என்று சிறு சிறு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது .
இதில் உள்ள சிலைகளை காணும் பொழுது இது பிற்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக தோன்றுகிறது .
இக்கோயிலின் சண்டிகேஸ்வரருக்கு அருகில் ஒரு கண்ணப்பநாயனார் புடைப்புச் சிற்பமாக தனிக்கல்லில் காணப்படுகின்றது .
அருகில் அமர்ந்த நிலையில் விஷ்ணு துர்கா தேவி சிலையும் உள்ளது.
இக்கோயில் குன்றத்தூரில் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது .
இவ்விடத்தில் முருகன், திருமால் மற்றும் சிவன் கோயில் மிக அருகருகே உள்ளது.
முருகன் கோயில் வடக்கு நோக்கிய கோபுரமும்,
திருமால் கோயில் மேற்கு நோக்கிய கோபுரமும் ,
சிவன் கோயில் தெற்கு நோக்கிய கோபுரமும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள முருகன் கோயில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது....


           ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
           தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
           நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
           மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
           சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
  • அமர்ந்த நிலையில் உள்ள விஷ்ணு துர்க்கை
  • கண்ணப்ப முக்தி அளிக்கும் காட்சி


No comments:

Post a Comment

Popular Posts