மெல்ல மெல்ல கதிரவனின் கதிர்வீச்சினால் அடிமை கொள்ளப்பட்ட கற்கள் லேசாக தகிக்க ஆரம்பித்த சமயத்தில்....
அதிகப்படியான பாறைகளையும் , ஆங்காங்கே சில பசுமையான செடி, மற்றும் மரங்களையும், 2300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் தன்னகத்தே தாங்கியுள்ள , சமண சமய புனித தலமான விளங்கும் விந்திய மலையில் , கிழக்கு மேற்காக அமைந்த படிகளின் மூலம் நாங்களும் மெல்ல மெல்லவே ஏறிச் சென்றோம்....
வரலாற்றுச் சிறப்புமிக்க சரவணபெலகுளா என்னும் இந்த இடம் மௌரியப் பேரரசு முதல் விஜயநகர பேரரசர்கள் வரை பல்வேறு பேரரசுகளின் வரலாற்றுச் செய்திகளை கல்வெட்டுகளாகவும் வாய்மொழி செய்திகளாகவும் கொண்டுள்ளது.
கி.மு நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் ( 317 - 297) தனது குருநாதர் பத்திரபாகு முனிவர் என்பவருடன் இந்த இடத்திற்கு வந்து தென்னகத்தில் சமண சமயத்தை பரவச் செய்தார் என்ற ஒரு செய்தியையும் இந்த இடம் இன்றளவும் தாங்கியுள்ளது .
கோமதீஸ்வரர் என்று அழைக்கப்பட்ட பாகுபலி என்பவருடைய ஒற்றை கல்லினாலான 57 அடி உயரம் கொண்ட திருவுருவச்சிலை பத்தாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் மேற்கு கங்கா பேரரசின் அமைச்சராக இருந்த
சாமுண்டராயர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ,
ஹௌய்சாள பேரரசின் அமைச்சரால் , இந்தக் கோயிலில் சுற்று சுவர்கள் அமைக்கப்பட்டு கோமதீஸ்வரர் சிலை கொண்ட இடத்தை முழு திருக்கோயிலாக மாற்றியுள்ளார்.
சற்று உடல் வருத்தத்துடனே படிகளை கடந்து இந்த கோயிலின் முதல் நுழைவாயிலை அடைந்ததுமே, இடது புறத்தில் உள்ள பெரிய பாறை ஒன்று தீர்த்தங்கரர் மற்றும் சமணத் துறவிகளின் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டு அழகு படுத்திருப்பதைக் காணலாம். மேலும் நுழைவாயிலின் இரண்டு புறத்திலும் உள்ள சிறு கோயில்களில் பரத மற்றும் பாகுபலி இவர்களின் சிறு சன்னதிகள் துவாரபாலகர் போல அமைந்துள்ளது.
இந்த நுழைவாயிலின் மேற்பகுதியில் அமைந்துள்ள வேழத் திருமகளின் அழகிய புடைப்புச் சிற்பம் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் வசீகர தன்மையையுடையது... பத்ம பீடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும்
இத்திருமகளுக்கு இரண்டு களிறுகள் நீராட்டும் விதமாகவும், அதற்கு மேலே அழகிய யாழிகள் தோரணங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது....
இதற்கு அடுத்து இரண்டாவது நுழைவாயிலை கடக்கும் பொழுது பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்ட தூண்களைக் கொண்ட அழகிய மண்டபம் நம்மை வரவேற்று , மூன்றாவது நுழைவாயில் மற்றும் இந்த திருக்கோவிலின் பிரதான சுற்றை அடைய அழைத்துச் செல்கிறது....
உள்ளே உள்ள சுற்றுச்சுவரில் பல்வேறு புடைப்புச் சிற்பங்களும், சில மண்டபங்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் காணப்படுவதுடன் பல்வேறு கல்வெட்டுகளையும் கொண்டுள்ளது.
இதற்கு அடுத்து கோவிலின் உள்ளே நாம் காணும் பிரம்மாண்டமான கோமதீஸ்வரர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இடங்களில், ஆதிநாதர் முதல் வர்த்தமான மகாவீரர் வரை உள்ள 24 தீர்த்தங்கள் சிலைகளும், சில சமண துறவிகளின் சிலைகளும் 'நிர்வாணா' என்ற தத்துவத்தை விளக்கும் விதத்தில் அமைந்துள்ளது...
உலக மக்களிடையே சமாதானத்தையும் , அன்பையும் , ஜீவகாருண்யத்தையும் வலியுறுத்திய,
வலியுறுத்தி கொண்டிருக்கின்ற சமண சமயத்தின் ஒரு உன்னதமான புனித ஸ்தலம் இந்த சரவணபெலகுளா .....😊😊😊
#சரவணபெலகுளா
#வரலாற்றுப்_பயணங்கள்
#கோமதீஸ்வரர்
#பாகுபலி
#தீர்த்தங்கரர்கள்
#பத்திரபாகு_முனிவர்

- இரண்டு புறங்களிலும் பரத மற்றும் பாகுபலி சிலைகள் வரவேற்க , தோரண வாயிலை கஜலஷ்மி புடைப்புச் சிற்பம் அழகுபடுத்த காணப்படும் சரவணபெலகுளா கோயிலின் முதல் நுழைவாயில்...
- பாதி மலையின் மீது இருந்து ஊரின் அழகிய இயற்கை வனப்பு மிக்க தோற்றம்
வணங்கி நிற்கிறேன்
கிழக்கு மேற்காக அமைந்துள்ள படிக்கட்டுகள். இது பிரதான வழி அல்ல...
பல வருஷமா தனியாவே வெச்சுட்டு சாப்பிடுவார் போல...😜😜
இங்கு நடனமாடும் அழகிய பெண் உருவின் கால்கள் தரையில் பட்டதாகவே தெரியவில்லை .... அவளின் உடை அமைப்பும் அதை உறுதி செய்கிறது..
ரெண்டு கொக்குகள் கொஞ்சி நிற்க ..
மேலே பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம்
சிம்ம யாழிகள் மகர தோரணங்களாக விளங்க, இரண்டு மத்த கஜங்கள் குட நீராட்ட, அழகிய தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமி தேவி.... தோரண வாயிலில் இவ்வளவு பெரிய புடைப்புச் சிற்பத்தை இங்கேயே நான் பார்க்கிறேன்....😊😊
திருக்கோயிலுக்குள் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது நுழைவாயில்
பசி வெறி முற்றிய கன்றுறென்று தாயின் மடியைப் பிய்த்து எடுத்துவிடும் போல....
குதிரை வீரனையும் ,தீர்தங்கரரையும் அழகிய தூணில் பிரித்துக் காட்டும் சிம்ம யாழி வரிசை
சற்றே கொஞ்ச எத்தனிக்கும் மகரங்கள்...
மேகங்கள் சூழ்ந்து நிற்க கோவிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய மண்டபம்
ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய தீர்த்தங்கரர்களைப் புடைப்புச் சிற்பமாக தாங்கும் பாக்கியம் பெற்ற நுழைவாயிலின் இடது புறத்தில் அமைந்த பாறை..
இறைவனை தொழும் போது எத்தனை சாந்தமான முகம் இந்த நங்கைக்கு....
திருக்கோவிலின் முகப்பு மண்டபத்தை எட்டிப்பத்தபடி பாகுபலி
சரவணபெலகுளா என்று அழைக்கப்படும் வெள்ளைக்குளம்
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
அருகிலுள்ள சிறு குன்றுகளில் இருந்து வளர்ந்த கொடிகள் பாகுபலியை சுற்றி வளைத்துக் கொண்டு இருக்கின்றன😜😜
கட்டுக் குலையாத நங்கை, வைத்த கண் வாங்காமல் பாகுபலியை கண்டு பிரமித்து கொண்டிருக்கிறாள் போலும்....
No comments:
Post a Comment