Tuesday, December 24, 2019

திட்டிவாசல்

#திட்டிவாசல்

கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்

எங்கு நோக்கிலும் புகைப்பட கருவி பொருத்தி கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருப்பதை தற்காலத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

இதேபோன்று கண்காணிக்கும் வேலைக்காகவும் , சில ரகசிய நடவடிக்கைகளுக்காகவும் , கோட்டை வாயில்கள் , அரண்மனை வாயில்கள் மற்றும் கோயில்களின் நுழைவாயில்களிலும் உள்ள பெரிய கதவுகளில், சிறிய அளவில், பல வடிவங்களில் உள்கதவு ஒன்று அமைப்பது வழக்கமாக இருந்தது... அத்தகைய கதவிற்கு 'திட்டிவாசல்' என்று பெயர்.

நம்மை வரலாற்று கடலுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்ட திரு கல்கி அவர்கள் , சிவகாமி வாதாபியில் தங்கியிருந்த வீட்டில் திட்டிவாசல் இருப்பதையும், அது எவ்வாறு பயன்பட்டது என்பதையும் அழகாக வர்ணித்திருப்பார், அதுவும் சற்று பதட்டமான சூழ்நிலையில்...... கண்ணபிரானுக்கு காலனாக அமைந்ததும் அதே திட்டிவாசல் தான்...🙂🙂🙂

இத்தகைய கதவு அமைந்திருப்பது , அந்த இடத்தைச் சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் வகையில் இரகசிய நுழைவாயிலாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

இப்பொழுதும் பல கோயில்களின் பிரதான நுழைவாயிலின் பெரிய கதவுகளில் திட்டிவாசல் அமைந்திருப்பதை காணலாம்.
சிறுவயதில் எங்கள் ஊரில் ஒரு சிவன் கோயில் ஒன்றில் இத்தகைய திட்டிவாசல் உண்டு அதன் வழியாக நுழைந்து உள்ளே சென்று விளையாடும் அந்த களிப்பான மனநிலை இன்று அதே திட்டிவாசல் வழியாக நுழைந்து போதும் ஏற்படுகிறது.....

திட்டிவாசல் பயன்பாட்டுக்கு மட்டுமல்ல சில நினைவுகளையும் சுமந்து தான் நிற்கின்றது போலும்🥰🥰

இந்த திட்டிவாசலை புதவம் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கம்பத்வாரம் என்று காமிகாகமம் குறிப்பிடுகிறது....

தகவல் Sankara Narayanan G avl

கிழக்கு மேற்காக அமைந்த மூன்று வீதிகள் , அனைத்து வீதிகளிலும் மேற்குப் புறத்தில் கிழக்கு நோக்கியபடி அமைந்திருக்கும் சிறிய பிள்ளையார் கோயில் , பெரும்பாலும் நெசவை தொழிலாக கொண்ட மக்கள், இரண்டு அழகிய குளங்கள், ஊரின் கிழக்கு எல்லையில் ராணி அம்மன் கோயிலும் சிவன் கோயிலும் அமைந்திட , எதார்த்தமான மக்கள் வாழக்கூடிய அழகிய கிராமம் ஏகனாம்பேட்டை....

என் சிறுவயது நாழிகைகள் பெரும்பாலும் இந்த இரண்டு கோயில்களிலும் , அங்கு அமைந்துள்ள மரத்தடியிலுமாக சுகமாக கழிந்தது, படிப்பதற்கும் விளையாடுவதற்கும் நாங்கள் பயன்படுத்திய இடமும் இதுவே...
இன்றும் அதே பசுமையான நினைவுகளோடு அதே சிவன் கோயிலில்...🙂🙂🙂


  • திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில். ஏகனாம்பேட்டை...



No comments:

Post a Comment

Popular Posts