வில்வநாதேஸ்வரர் - திருவல்லம்(திருவலம்)
எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறு வேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே.
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறு வேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே.
-திருஞானசம்பந்தர்
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடிவந்து பாலாற்றில் கலக்கும் கிளை நதி பொன்னை அல்லது நிவா நதி .
இந்நதி பாலாற்றுடன் சங்கமிக்கும் இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்னால், தெற்கு கரையோரம் திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப்பட்ட ஒரு அழகிய வில்வநாதேஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ளது.
இங்குள்ள வள்ளி, தெய்வானை, முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார் .
திருஞானசம்பந்தர் இந்த ஊரை திருவல்லம் என்றும் அருணகிரிநாதர் இவ்வுரை திருவலம் என்றும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்க வேண்டும்.
மூலஸ்தானத்தில் உள்ள சதுர ஆவுடையாரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வில்வநாதேஸ்வரரை இரண்டு அழகிய துவாரபாலகர்கள் காவல் புரிகின்றார்கள். கலையம்சம் மிக்க தனி சிற்பமாக துவாரபாலகர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
மூலஸ்தானத்திற்கு இடது புறத்தில் ஒரு சிறிய பள்ளத்தில் பாதாள லிங்கம் , நந்தி மற்றும் சிறிய விநாயகர் சிலை உடன் உள்ளது.
வலது புறத்தில் தெற்கு நோக்கி சங்கரநாராயணர் சிலை ஒன்று உள்ளது.
வலது புறத்தில் தெற்கு நோக்கி சங்கரநாராயணர் சிலை ஒன்று உள்ளது.
அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் அழகான சாளரம் ஒன்று சுற்றிலும் கல்வெட்டுகளுடன் மண்டபத்தின் அழகை கூட்டி கட்டுகின்றது.
மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபத்தை சுற்றி ஒரு உள்சுற்று ஏறக்குறைய முழுவதும் கல்வெட்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இதில் 63 நாயன்மார்கள் ,தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர் மற்றும் விநாயகர் சிலை உள்ளது, கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள வில்வநாதேஸ்வரர் முதல் உள்சுற்றுக்கு வெளியே வரும்போது ஒரு நந்தி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சாதாரணமாக மூலஸ்தானத்தை நோக்கி அமர்ந்திருக்கும் நந்தி இக்கோயிலில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பது இக்கோயிலின் சிறப்பாகும், இதன் விளக்கம் புராணக் கதைகளுடன் தொடர்புடையது.
உள் திருச்சுற்றில் இருந்து வெளியே வரும்போது மிகப்பெரிய சுதையாலான நந்தி கொடிமரம்,பலி பீடம் மற்றும் வெளி மதில் சுவரை அடைத்து நிற்கின்றது, இடது புறத்தில் நடராஜ மூர்த்தியின் தனி சன்னதி ஒன்று உள்ளது .
கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள பெரிய நந்திக்கு எதிரே, நின்ற நிலையில் அதிகார நந்தி மூலஸ்தானத்தை நோக்கி வணங்கி நின்று கொண்டிருக்கிறார் , அதற்கு அடுத்து கிழக்கு நோக்கி ஒரு நந்தியும் , கொடிமரமும் மற்றும் பலிபீடம் உள்ளது.
இரண்டாம் உள்சுற்றில் மேற்குப் புறத்தில் உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிஸ்வநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.
இதனை அடுத்து நுட்பமாக வடிவமைக்கப்பட்ட சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.
இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.
வடமேற்கு மூலையில் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது . இந்த சன்னதியின் சுவர்களில் அழகு மிகுந்த பல புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிறது.
அடுத்து வடமேற்கு மூலையில் சூரிய பகாவானுக்கு ஒரு சிறிய தனி கோயில் உள்ளது ,
அதற்கு அடுத்து கொடிமரத்தைக் கடந்து தெற்கு வாசல் வழியாக கோயிலை விட்டு வெளியேறினால் மூன்றாவது திருச்சுற்று ஒன்று உள்ளது இங்கு இடது புறத்தில் நீராழி மண்டபமும் வலதுபுறத்தில் ஒரு பெரிய கோசாலை ஒன்று உள்ளது.
இதையும் கடந்து நேரே வந்தால் தெற்கு நோக்கி அமைந்திருக்கின்ற ராஜகோபுரத்தின் வழியாக வில்வநாதேஸ்வரர் கண்ட மகிழ்ச்சியில் உடலளவில் வெளியே வரலாம்.🙂🙂
ஏராளமான கல்வெட்டுக்களை தன்னகத்தே தங்கியுள்ள இந்த கோயிலில் , பாணர்கள் (வாணர்) பல்லவர்கள், வைதும்பராயர், கங்கர்கள் , பாண்டியர்கள் மற்றும் சோழர்களுடைய பல்வேறு நிவந்த கல்வெட்டுகள் உள்ளது..
பாணர் வம்சத்து சிற்றரசர்களின் தலைநகரம் திருவல்லம் . பொன்னியின் செல்வனில் வரும் வல்லவரையன் வந்தியத்தேவன் இந்த பாணர் குலத்தைச் சேர்ந்தவர்.
இந்த வம்சத்தைச் சேர்ந்த விக்ரமாதித்ய மாவலி வானவராயன் என்பவன் விண்ணப்பத்தின் பேரில் நந்திவர்ம பல்லவன் III (846 - 869) மூன்று கிராமங்களை இறையிலி நிலம் ஆக இந்தக்கோயிலுக்கு
தானமாக வழங்கியுள்ளான் ,இந்த மூன்று கிராமங்களும் ஒன்றிணைத்து விக்கிரமாதித்ய சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த வம்சத்தைச் சேர்ந்த விக்ரமாதித்ய மாவலி வானவராயன் என்பவன் விண்ணப்பத்தின் பேரில் நந்திவர்ம பல்லவன் III (846 - 869) மூன்று கிராமங்களை இறையிலி நிலம் ஆக இந்தக்கோயிலுக்கு
தானமாக வழங்கியுள்ளான் ,இந்த மூன்று கிராமங்களும் ஒன்றிணைத்து விக்கிரமாதித்ய சதுர்வேதிமங்கலம் என்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊர் நந்திவர்மன் -2 (731 -795) காலத்தில் வாணபுரம் என்றும், நந்திவர்மன்-3 (846-869) காலத்தில் தீக்காலி வல்லமுடைய பரமேஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆதித்ய சோழனால் ஒன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலம் கைப்பற்றப்பட்டது, பிறகு பராந்தக சோழனால் வாணர்கள் அரசும் வீழ்த்தப்பட்டு சோழர்களின் அரசுடன் இணைக்கப்பட்டது.
இந்த ஊர் சிவபாத சேகரன் ராஜராஜன்-I (985 -1014)காலத்தில் தீக்காலி ஆழ்வார் என்றும் தீக்காலி வல்லம் என்றும்,
கங்கைகொண்ட சோழன் ராஜேந்திரன்-1(1012-1044) காலத்தில் திருவல்லம் உடையார் என்றும் , தென் கலிங்கம் வென்ற விக்கிரம சோழன்(1118-1135) காலத்தில் திருவல்லம் உடைய மகாதேவர் என்றும், குலோத்துங்கன்-III(1178-1218) காலத்தில் திருவல்லம் உடைய நாயனார் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
கங்கைகொண்ட சோழன் ராஜேந்திரன்-1(1012-1044) காலத்தில் திருவல்லம் உடையார் என்றும் , தென் கலிங்கம் வென்ற விக்கிரம சோழன்(1118-1135) காலத்தில் திருவல்லம் உடைய மகாதேவர் என்றும், குலோத்துங்கன்-III(1178-1218) காலத்தில் திருவல்லம் உடைய நாயனார் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment