நெஞ்சையள்ளும் நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி
திருநெல்வேலி பிரம்மபுரி தேவர் என்று அழைக்கப்படும் நெல்லையப்பர் கோயிலின் ஆச்சரிய பிரமிப்புகள் எவை என்று யோசிக்கும்போது கட்டடக்கலையா? இல்லை ,சிற்பக்கலையா ?
இல்லை இசைத்தூண்களா? இல்லை நீராழி குளமா என்று அதிசயத்து கொண்டே செல்லலாம் , இதற்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை....
இல்லை இசைத்தூண்களா? இல்லை நீராழி குளமா என்று அதிசயத்து கொண்டே செல்லலாம் , இதற்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை....
இந்தக் கோயில் நான்கு திசைகளிலும் நான்கு பெரிய நாயக்கர் கால கோபுரங்கள் , கிழக்கு திசை கோபுரத்தின் மூலமாக உள்ளே நுழையும் போது இரண்டு பக்கங்களிலும் கற்தூண்களும், மேலே மரத்தாலான சிறப்புமிக்க சிலை தோரணங்களும் நம்மை வரவேற்கின்றது.
இந்த வழியாக உள்ளே நுழையும் பொழுது முதல் சுற்றில் ,முதலில் மிகப் பெரிய நந்தியும் அதற்கு முன்னால் கொடிமரமும் காணப்படுகின்றது... கொடிமரத்திற்கு சற்று முன்னால் இரண்டாம் சுற்றுக்கு நுழைய இருக்கும் நுழைவாயிலின் தூண்கள் மிகப்பெரிய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகளின் மூலம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்தச் சிலையில் மிக நீண்ட கத்தியை ஒரு கையிலும் , எக்காளம் ஒரு கையிலும் வைத்துக்கொண்டு ஒரு வீரன் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தாண்டி உள்ளே நுழையும் போது நெல்லையப்பர் கோயிலின் சிறப்பு அம்சமாக விளங்கும் இசைத் தூண்கள் உள்ள ஒரு மண்டபம் காணப்படுகின்றது. இந்த இசைத் தூண் மண்டபத்திற்கு செல்வதற்கு முன்னால் நான்கு பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களும் கொடிமரம் உள்ளது.
இந்த இசைத் தூண்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது காரணம் நடுவில் ஒரு பெரிய தூண் அதை சுற்றி சிறிய இசை எழுப்பும் தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த மொத்த அமைப்பு ஒரே கல்லால் ஆனது. இசைத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரு ஒரு சுரத்தில் இசையை எழுப்பக்கூடிய வகையாக வடிவமைந்து சிற்பிகள் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்தத் தூண்கள் 16 ஆம் நூற்றாண்டில் அங்கு ஆட்சி செய்த நாயக்கர்காலத்தைச் சார்ந்தவை என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
அந்த மண்டபத்திற்கு இடது புறமாக சென்று மேலே ஏற வேலைப்பாடுகளுடன் கூடிய படிக்கட்டுகள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
அந்த மண்டபத்திற்கு இடது புறமாக சென்று மேலே ஏற வேலைப்பாடுகளுடன் கூடிய படிக்கட்டுகள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
இம்மண்டபத்தை கண்டு கடந்து முதல் சுற்றுக்குள் நுழையும் பொழுது முதலில் நாம் மகா மண்டபத்தை அடையலாம்.இந்த மகா மண்டபத்தில் இடதுபுறமாக மிகப் பெரிய அளவிலான விநாயகர் சிலை ஒன்று உள்ளது.
கையில் ஜெபமாலையுடன் காணப்படும் இந்த விநாயகர் வலம்புரி விநாயகர் என்பது கூடுதல் சிறப்பு . இந்த விநாயகர் சிலையை கடந்து வாயிலில் நுழையும் பொழுது , இரண்டு கம்பீரமான துவார பாலகர்கள் காவல் புரிவது காணலாம். அவர்களை கடந்து
அர்த்த மண்டபத்திற்குள் நாம் நுழையும் பொழுது நேராக நமக்கு காட்சி அளிப்பவர் நெல்லையப்பர்....🙂🙂🙂
ஏன் சற்று சாய்ந்த நிலையில் நெல்லையப்பர் காணப்படுகின்றார் என்றும், ஏன் மூலஸ்தான சிவலிங்கத்தில் இடது புறமாக வெட்டுக்காயம் உள்ளது என்றும் புராணக் கதைகள், காரணங்களைக் கூறுகிறது.
அர்த்த மண்டபத்திற்குள் நாம் நுழையும் பொழுது நேராக நமக்கு காட்சி அளிப்பவர் நெல்லையப்பர்....🙂🙂🙂
ஏன் சற்று சாய்ந்த நிலையில் நெல்லையப்பர் காணப்படுகின்றார் என்றும், ஏன் மூலஸ்தான சிவலிங்கத்தில் இடது புறமாக வெட்டுக்காயம் உள்ளது என்றும் புராணக் கதைகள், காரணங்களைக் கூறுகிறது.
மூலஸ்தானத்தில் உள்ள நெல்லையப்பருக்கு அருகில் இடது புறத்தில் சயன நிலையில் நெல்லை விஷ்ணு மூர்த்தி கிழக்கு மேற்காக கிடந்து நெல்லையப்பரையும் , காந்திமதி அம்பாளையும் நோக்கும் தோரணையில் பள்ளி கொண்டுள்ளார்... இந்த அனந்தசயன பெருமாளை நாம் மிக அருகில் சென்று பார்க்க முடியும் ,
விஷ்ணு மூர்த்தியின் தலை அருகே ஒரு பெரிய நிலைக் கண்ணாடி பொருத்தப்பட்டு அந்த இடத்தின் அழகை நமக்கு மேலும் கூட்டி காட்டுகின்றது, ஏழாம் நூற்றாண்டில் நெடுமாற பாண்டியனால் ஓரளவு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கோயிலில் அந்த சமயத்திலேயே .இந்த விஷ்ணு மூர்த்தி வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை....
விஷ்ணு மூர்த்தியின் தலை அருகே ஒரு பெரிய நிலைக் கண்ணாடி பொருத்தப்பட்டு அந்த இடத்தின் அழகை நமக்கு மேலும் கூட்டி காட்டுகின்றது, ஏழாம் நூற்றாண்டில் நெடுமாற பாண்டியனால் ஓரளவு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கோயிலில் அந்த சமயத்திலேயே .இந்த விஷ்ணு மூர்த்தி வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை....
விஷ்ணு மூர்த்தியின் சிலையை பின்னாளில் அங்கே வைத்திருந்தாலும் , ஒரே கர்ப்பகிரகத்தில் சிவனும் விஷ்ணு மூர்த்தியும் இருப்பது அந்தக் காலத்தில் சைவ மற்றும் வைணவ சமயத்தின் ஒற்றுமையை காட்டுவதாக கொள்ளலாம்....
அர்த்த மண்டபத்தில் நுழைவதற்கு நாம் நுழைந்த கிழக்குப்புற வாயில் இல்லாமல் வடக்கிலும் தெற்கிலும் சிறிய வாயில்கள் உள்ளது. தெற்குப்புற வாயில் வழியாக வெளியே வரும்போது நேராக சில புடைப்புச் சிற்பங்களும் , தக்ஷிணாமூர்த்தியும் கன்னிமூல கணபதி லிங்கோத்பவர் பிரம்மா சண்டிகேஸ்வரர் போன்ற சிலைகளும் முதல் திருச்சுற்றை அலங்கரிக்கின்றது. இச்சுற்றில் மேற்குப் புறத்தில் தாருகாவனத்து ரிஷிகளை கர்வபங்கம் அடையச்செய்த பிட்சாடன மூர்த்தி கதையை தத்ரூபமாக வண்ணமயமான சிலையாக அமைத்துள்ளனர். வடகிழக்கு மூலையில் மனதைக் கவரும் விதத்தில் மகிஷாசுரமர்த்தினி மற்றும் பைரவருக்கு தனியாக சின்ன கோயில்கள் உள்ளது.
சாதாரணமாகவே இந்த சிற்பிகள் மகிஷாசுரமர்த்தினி வடிவமைக்கும் போது அதிக கவனம் செலுத்துவதாக எனக்குத் தோன்றும், இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி எட்டு கைகளில் இரண்டில் அபயமுத்திரையும் மேலும் இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரமும் மீதமுள்ள நான்கு கைகளில் வெவ்வேறு ஆயுதங்களுடன், லேசாக புன்னகையுடனும், அருகில் தன்னுடைய வாகனம் நிற்க,அன்னை எருமைக்கடா தலையின் மீது நின்று கொண்டிருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி நம்மை மிகவும் வசீகரிக்கின்றாள்.....🙂🙂
இவற்றைப் பார்த்து விட்டு இரண்டாம் திருச்சுற்றுக்குள் செல்லும் பொழுது 63 நாயன்மார்களின் தனி சிலைகளும்,
அகத்தியர் மற்றும் ரிஷிகளின் சிலைகளும் உள்ளது அதற்கு அருகில் சுரபேஸ்வரர் எனும் மூன்று தலை,மூன்று கால் ,மூன்று கையுடைய சிவனின் ஒரு ரூபம் தனி சிலையாக அமைக்கப்பட்டுள்ளது...
இதை கடந்து செல்லும்பொழுது தென்மேற்கு மூலையில் ஏறக்குறைய 15 அடி உயரத்தில் ஒரு மண்டபமும் அந்த மண்டபத்தின் முடிவில் அழகிய சோமாஸ்கந்தர் சிலையும் உள்ளது.
இக்கோயிலின் இவ்விடம் இனிமையும் மென்மையும் கலந்த ஒரு உணர்வை ஊட்டுகின்றது, இதை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை அங்கே சென்று நேரடியாக உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
அகத்தியர் மற்றும் ரிஷிகளின் சிலைகளும் உள்ளது அதற்கு அருகில் சுரபேஸ்வரர் எனும் மூன்று தலை,மூன்று கால் ,மூன்று கையுடைய சிவனின் ஒரு ரூபம் தனி சிலையாக அமைக்கப்பட்டுள்ளது...
இதை கடந்து செல்லும்பொழுது தென்மேற்கு மூலையில் ஏறக்குறைய 15 அடி உயரத்தில் ஒரு மண்டபமும் அந்த மண்டபத்தின் முடிவில் அழகிய சோமாஸ்கந்தர் சிலையும் உள்ளது.
இக்கோயிலின் இவ்விடம் இனிமையும் மென்மையும் கலந்த ஒரு உணர்வை ஊட்டுகின்றது, இதை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை அங்கே சென்று நேரடியாக உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இங்கிருந்து கீழே இறங்கி இடதுபுறமாக திரும்பும் பொழுது நாம் காண்பது சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபை ஆகும்.
தெற்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் இந்த பாதை ஆனது பார்ப்பவர்கள் அனைவரையும் கவரக் கூடிய ஒன்றாகும், இந்தப்பாதையில் இடதுபுறத்தில் முற்றும்கண்ட ராமகோன் என்பாரது வடிவச் சிலை உள்ளது, வலது புறத்தில் (ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மூங்கில் காடுகளாக இருந்ததையும்,மூங்கில் காட்டில் கண்டெடுக்கப்பட்ட சுயம்பு லிங்கமான நெல்லையப்பரை தான் இங்கு பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள் என்பதையும் தல புராணம் கூறுகிறது இதற்கு சான்றாக) ஒரு சிறிய மூங்கில் புதரும், அருகில் ஒரு விநாயகர் சிலையும் உள்ளது.
இந்தப்பாதையில் இரண்டு புறமும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உயரமான தூண்கள் உள்ளன இதில் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால் அனைத்து தூண்களையும் கம்பீரமான களிறுகள் தாங்கிக்கொண்டிருக்கும் , இவ்வாறு தாங்கிக்கொண்டிருக்கும் யானையின் கழுத்தில் பல அணிகலன்களும், முதுகில் பட்டு துணி பொருத்தப்பட்டு சங்கிலியுடன் கூடிய மணியும், பின்புறம் அலங்கார அணிகலன்களும் லேசாக வளர்ந்த தந்தமும் நீண்ட தும்பிக்கையும் அருமையாக செதுக்கியிருக்கிறார்கள்...
இந்தப் பாதையில் உள்ள மேற்கூரை மிகவும் நுணுக்கமான கற்களால் செதுக்கப்பட்டு இரண்டு பக்க தூண்களையும் இணைத்து காணப்படுகிறது.
அதற்கு அடுத்தாற் போல் உள்ளது தாமிர சபை, ஒரு பெரிய ஆவுடை கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆவுடை வழியாக பார்த்தால் வடக்குப் புறத்தில் உள்ள சந்தன சபாபதியைக்காணலாம்.
இதற்கு அடுத்தாற்போல் இடது புறத்தில் அஷ்டலட்சுமிகளும் புடைசூழ கஜலட்சுமியின் தனி சிலைகளும்,சனீஸ்வரனின் தனிக்கோயிலும் உள்ளது.
வலது புறத்தில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் உள்ளது. திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜ மூர்த்தி மற்றும் சிவகாமி அம்மையின் உலோகச் சிலைகள் மனதை கவரும் விதத்திலும் ,அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறுகோயில் மற்றும் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மனதைக் கவரும் விதத்திலும் உள்ளது.
நெல்லையப்பர் கோயிலின் இந்த இரண்டு சுற்றுகளிலும் பெரும்பாலும் வலதுபுற சுவர்களில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
அதற்கு அடுத்தாற் போல் உள்ளது மூன்றாவது திருச்சுற்று,
இச்சுற்றின் ஆரம்பத்தில் மிகப் பெரிய தூண்களும் , தூண்களுடன் இணைத்து அமைக்கப்பட்ட பெரிய பெரிய சிலைகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது, இந்த சுற்றில் சைவக் குரவர்கள் நால்வருக்கு தனியாக ஒரு சிறு கோயிலும், தென்கிழக்கு மூலையில் சைலப்பருக்கு ஒரு சிறிய கோயிலும் உள்ளது..
இந்தச் சுற்றில் கிழக்கிலிருந்து மேற்கு வழியாக செல்லும் பொழுது இடது மற்றும் வலது புறங்களில் உள்ள தூண்களில் பல பெரிய சிலைகள் கையில் ஆயுதங்களுடன் நுணுக்கமான வேலைப்பாடு களுடனும் காணப்படுகின்றது, இடது புறத்தில் விழாக் காலங்களில் சுவாமி வீதி உலாவிற்கு பயன்படுத்தும் பல்வேறு சுவாமி வாகனங்களை பாதுகாக்கும் அறைகள் காணப்படுகின்றன. ஏறக்குறைய மையப்பகுதியில் வலது புறத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு சிறிய கற்கோயிலும், அதைச்சுற்றி மரத்திலான தோரணங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இடது புறத்தில் தெற்கு நோக்கி ஒரு கோபுரம் உள்ளது.
இதற்கு அடுத்து நாம் பார்ப்பது ஆறுமுக நயினார் சன்னதி. இந்த இடத்தின் சிற்ப அழகுகளை ஒரு சிறிய கட்டுரையில் அடக்க முடியாது . சிறிய சிறிய தூண் சிற்பங்களும் ,தனி சிலைகளும் மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க கின்றார்கள். மேலும் இங்குள்ள வள்ளி தெய்வயானையுடன் கூடிய ஆறு முகங்களையும் நாம் கண்டுகளிக்கக்கூடிய விதமாக செதுக்கப்பட்டுள்ள ஆறுமுகக் கடவுளின் சிலை அதி நேர்த்தியானது...
இதற்கு அடுத்தாற்போல் வடமேற்கில் காசி விசுவநாதர் என்று தனி ஆலயமும் ஒன்று உள்ளது. இந்த மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் பாதையின் இறுதியில் இடது புறத்தில் யானை பாதுகாக்கும் இடமும், வலதுபுறத்தில் சாஸ்தா சிலை ஒன்றும் உள்ளது.
வடகிழக்கு மூலையில் ஒரு நான்கு அடி உயரத்தில் ஒரு பெரிய பல தூண்களை கொண்ட கல் மண்டபம் உள்ளது . அங்கு சேகரித்து வைத்திருக்கும் பல நெல்மூட்டைகளை கண்டால் தற்போதும் கோயிலுக்கு என்று நிறைய நிலங்கள் உள்ளது என்று நாம் யூகிக்க முடிகிறது....
வடகிழக்கு மூலையில் ஒரு நான்கு அடி உயரத்தில் ஒரு பெரிய பல தூண்களை கொண்ட கல் மண்டபம் உள்ளது . அங்கு சேகரித்து வைத்திருக்கும் பல நெல்மூட்டைகளை கண்டால் தற்போதும் கோயிலுக்கு என்று நிறைய நிலங்கள் உள்ளது என்று நாம் யூகிக்க முடிகிறது....
அடுத்தாற்போல் நவக்கிரகங்களுக்கு என்று ஒரு சிறிய மண்டபமும் பைரவருக்கு தனி சன்னதியும் உள்ளது, இவற்றைக் கடந்து செல்லும்போது மீண்டும் நாம் கொடிமரத்தையும் பெரிய நந்தியையும் அடையலாம்.
....
....
ஏறக்குறைய 30 சதவீதம் கூட இந்த கோயிலைப் ஞாபகம் வைத்துக் கொண்டு இங்கு விவரிக்க முடியவில்லை.....
ஆனால் ஒன்று தொடர்ந்து 10 நாட்கள் இந்த கோயிலை ஒரு முறையாவது சென்று பார்த்து வந்தால் நம் உடலில் இளைத்து விடும் என்பது நிதர்சனமான உண்மை, அவ்வளவு பெரிய கோயில் நமது சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தை தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்....
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற இந்தக் கோயில் 1400 ஆண்டுகளுக்கு மேலுள்ள வரலாற்று நிகழ்ச்சிகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது...
"பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே".
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே".
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெடுமாற பாண்டியன் முதல் 16ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த நாயக்கர் கால அரசர்கள் வரை பல அரசர்கள் மற்றும் வணிகர்கள் போன்றவர்களின் நிவந்த கல்வெட்டுகள் இந்த கோயிலில் உள்ளது.....🙂🙂🙏🙏
தொடரலாம்.......
- காந்திமதி நெல்லையப்பர் கோயில் கிழக்குப்புற கோபுரம், வேணுவனம் எனும் திருநெல்வேலி
- கையில் மூங்கில் வில்லுடன் ஒரு வீரனும் அருகில் ஒரு பெண் குழந்தையுடனும் இருக்கும் அதிநுட்பமான சிலைகள். இது அர்ஜுனன் மற்றும் சித்திராங்கதையாக இருக்கக்கூடுமோ??
- கையில் அமிர்த கலசத்துடன் மோகினி அவதாரம்
- பெரிய நந்தியும் கொடிமரமும் கோயில் யானையும் மூன்றாவது சுற்றில் — with Alkesh Zaveri.
- அழகிய மர வேலைப்பாடுடன் கூடிய நுழைவாயில் கூரையிலுள்ள தோரணம்
- நெல்லையப்பரை கம்பீரத்துடன் சுற்றிவரும் கோவில் யானை
- இந்தப் போர் யானை என்ன செய்கிறது என்று பாருங்கள் ஒரு வீரனுடைய காலை ஒரு காலால் அழுத்தி கொண்டு வீரனின் மற்றொரு காலை தன் தும்பிக்கையால் பிய்த்தெடுக்கிறது..
- பெரிய கற்தூண்களை தாங்கி நிற்கும் களிறு
- யாழின் அழகிய தோற்றமும் இசைத் தூண்களும்
- நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய மண்டபம்
- தன் உயரத்திற்கு போர் வாளை வைத்து இருக்கும் ஒரு வீரன்
- ராமக்கோன் என்பவர் தினமும் தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் வளர்ந்திருந்த, மூங்கில் காடு வழியாக மணப்படைவீடு மன்னருக்கு பால் கொண்டு செல்வது வழக்கம். ஒரு முறை பால்குடம் சுமந்து சென்ற ராமக்கோன் காலில் மூங்கில் இடறியது. அதில் அவர் கொண்டு வந்த பால் ஓரிடத்தில் கொட்டியது. பால் முழுவதும் சிந்தும் முன்பாக அதைக் கொண்டுபோய் மன்னரிடம் சேர்த்தார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்கதையானது. தினமும் குறிப்... See More
- சிவன் பார்வதியுடன் கூடிய அழகிய புடைப்புச் சிற்பம்
- சாபம் பெற்ற தட்சன் வேள்வி முடிந்த பிறகு ஆட்டு உருவத்தில் வந்து சிவன் மற்றும் பார்வதி வணங்கும் காட்சி
- இது வெறும் சாளரம் மட்டும் அல்ல இரண்டு போர் வீரர்கள் போர் புரியும் அழகான காட்சி
- ஆறுமுகநயினார் கோயிலின் உட்புறம்
- எப்பா இந்த புள்ள உள்ள இருந்து என்ன பாடு படுத்துது..
- ....
- இந்த உணர்ச்சியை அப்படியே இந்தச் சிலையில் கொண்டுவந்துள்ள சிற்பிகளை என்னவென்று சொல்வது
- அழகிய பெரிய முகப்பு நந்தி
- யோக நரசிம்ம மூர்த்தி
- மூங்கில் மரம் ஸ்தல விருட்சம்
- சந்தன சபாபதி
No comments:
Post a Comment