தமிழகத்தில் தலைசிறந்த கலைகளில் சிற்பக்கலையும் ஒன்றாகும். நமது சிற்பிகள் அதிநுட்பமான சிலைகள், சிற்பங்கள், கோபுரங்கள் மற்றும் தூண்களை செதுக்குவதில் மற்ற நாட்டு சிற்பிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தனர்...
மேலும் சிறப்பான விஷயம் , பல்லவ சிற்பிகள் மலையை குடைந்து குடைவரை அமைக்கும் கலையில் அற்புதமான படைப்புகளை உருவாக்கினார்கள் என்றால், பாண்டிய சிற்பிகள் பல நுணுக்கமான தூண்களையும் சிலைகளையும் வடிவமைப்பதில் சிறந்து விளங்கி இருக்கின்றார்கள் . அத்தகைய அதிசயமான நுட்பமான வடிவமைப்புகளில் ஒன்று தான் இசைத்தூண்கள்.
தந்தி வாத்தியக் கருவிகளில் மீட்டும் இசைக்கு சற்றும் சளைக்காத, இசையை உருவாக்கக்கூடிய தரமான கற்பாறைகளைக் கொண்டு, சரியான சங்கீத ஸவரத்தை வெளிப்படுத்தும் இசை தூண்களாக வடிவமைத்துள்ளனர்.
தாள கருவிகளான மிருதங்கம், கடம் போன்ற வாத்தியங்களினால் எழுப்பப்படும் ஒலியைப் போன்ற ஒலியையும், சில தூண்களின் மூலம் பெற முடியும் என்பது மேலும் அதிசயமான விஷயம்.
ஒவ்வொரு இசை தூண்களையும், ஒரு ஒரு அளவுகளினால், வெவ்வேறு வடிவமைப்புகளினால், உருவாக்குவதன் மூலம் வேறு வேறு இசை ஸவரத்தை இக்கற்கள் பிரதிபலிகின்றது
இந்த இசை தூண் சாதாரணமாக கோயில்களின் மண்டபங்களில் அமைக்கப்படுகின்றது.
இப்படி பிரமிக்கத்தக்க இசைத் தூண்கள் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் மணி மண்டபத்தில் நாம் காணலாம்.
மண்டபத்தின் முன்பக்கம் இவ்விதமான பண்ணிசைக்கும் இருதூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த அற்புதமான அழகிய இசைத்தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு ஸ்வரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பை அளிகின்றது.
ஒரே கல்லினால் ஆன இந்த மிகப்பெரிய இசை தூண் , மையத்தில் ஒரு பெரிய துணையும் அதைச் சுற்றி சிறிய சிறிய தூண்களுடனும் காணப்படுகின்றது.
மையத்தில் உள்ள பெரிய தூண் மேலே உள்ள கூரையை தாங்குவது போலவும் மற்ற தூண்கள் அந்த பெரிய தூண்களில் பதிக்கப்பட்டு இருப்பது போலவும் காண்கிறது..
மையத்தில் உள்ள பெரிய தூண் மேலே உள்ள கூரையை தாங்குவது போலவும் மற்ற தூண்கள் அந்த பெரிய தூண்களில் பதிக்கப்பட்டு இருப்பது போலவும் காண்கிறது..
இதில் மேலும் ஒரு அதிசயமான சிறப்பு என்னவென்றால், மையத்தில் உள்ள பெரிய தூணில் சில அலங்கார வடிவமைப்புகள் காணப்படுகின்றது, சுற்றியுள்ள சிறிய சிறிய இசை தூண்களுக்கும் இந்த பெரிய தூண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியதாகும், அவ்வாறு இருக்கையில் பெரிய தூண்களில் எவ்வாறு இவ்வளவு நுணுக்கமான அலங்கார சிற்பங்களை ஏற்படுத்த முடியும் என்று வியப்பின் உச்சத்திற்கே நம்மை கொண்டு செல்கிறது...
இத்தகைய கலையம்சம் மிக்க மணிமண்டபம் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த அரிகேசரி ( 640 -670)என்பவரின் காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டது....என்ற கருத்தும்,வீரசங்கிலி மார்த்தாண்டவர்மன் கி.பி. 1546-இசைத்தூண் மண்டபம் உருவாக்கம் என்றும் கல்வெட்டும் உள்ளது....
இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பவன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த பொழுது நெல்வேலி என்ற இடத்தில் அரிகேசரி என்ற நெடுமாற பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டான் என்பதிலிருந்து திருநெல்வேலி பக்தி மட்டுமல்ல போர் வீரத்திலும் சிறந்த நகராக விளங்கி இருக்கின்றது....
இந்தப் பாண்டிய அரசர் நின்றசீர் நெடுமாற பாண்டியன் என்று 63 நாயன்மார்களில் ஒருவர்....
தமிழக சரித்திர வரலாற்றில்,சிறந்த பக்தியின் மூலமாகவும், நிகரற்ற வீரத்தின் மூலமாகவும், தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தலைசிறந்த பாண்டிய மன்னர்களில் ஒருவரான நின்றசீர் நெடுமாற பாண்டியன்....
No comments:
Post a Comment