காந்திமதி வேணுவனநாதர் திருக்கோயில் , திருநெல்வேலி .
காலைக் கதிரவன் காந்திமதியம்மையை வணங்குவதற்காக உள்நுழையும் அதேவேளையில் கிழக்கு கோபுரம் வழியாக நாமும் உள்ளே நுழைந்தால் நேராக இருப்பது ஊஞ்சல் /கல்யாணமண்டபம்.
இந்த மண்டபம் கிழக்கு திசையில் இருந்து பார்க்கும் பொழுது ஆறு கற்தூண்கள் வரிசையாக கொண்டுள்ள மண்டபமாக விளங்குகிறது . மையத்தில் உள்ள இரண்டு கற்தூண்கள் மிகப்பெரிய சிலைகளுடன் கூடிய கற்தூண்கள் ஆகும்,மற்ற நான்கு தூண்கள் வழக்கமாக உள்ள சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கற்தூண்களாகும்.

இந்த மண்டபத்தின் இடது புறத்தில் ஆயிரங்கால் மண்டபமும் வலது புறத்தில் நீராழி மண்டபமும் உள்ளது.
ஆயிரம் கால் மண்டபத்தில் தூண்கள் சொல்லும் கதைகள் ஏராளம், வசீகரிக்கக் கூடிய பல சிற்பங்களையும், பல புராண கதைகள் சொல்லும் தூண் சிற்பங்களையும் இங்கே காணலாம். இங்குள்ள நீராழி மண்டபம் ஒரு பெரிய தெப்பக்குளத்தின் மத்தியில் பன்னிரெண்டு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோபுரத்துடன் ஒரு பெரிய பீடமாக அமைக்கப்பட்டுள்ளது , இக்குளத்தை அடைவதற்கு நான்கு புறங்களிலும் வாயிற் கதவுகள் உள்ளன இந்தக் குளத்தைச் அழகிய நடைபாதை மண்டபம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் அழகில் அமைக்கப்பட்டுள்ளது. காலைக் கதிரவன் இந்த தெப்பக்குளத்தில் பட்டுப் பிரதிபலிக்கும் அழகே தனி அழகு.
இந்த குளத்தின் மேற்குப் புறத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் , பஞ்சபூத லிங்கங்கள் , விநாயகர், சரஸ்வதி, தாருகாவனத்து முனிவர்களை கர்வபங்கம் செய்த பிச்சாடன மூர்த்தி ஆகியோருக்கு தனித்தனியாக சிறு சன்னதிகள் உள்ளன.

கல்யாண மண்டபத்தை கடந்து வரும்போது அடுத்து நாம் பார்ப்பது அழகிய நந்தி மண்டபம் பல நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்தூண்கள் கொடிமரமும் அழகிய நந்தி ஒன்றும் காணப்படுகின்றது .
சதா காந்திமதி அன்னையே கண்கொட்டாமல் காத்து நிற்கும் நந்தியை சுற்றியுள்ள நான்கு தூண்களும் அதிக சிற்ப நுணுக்கம் வேலைப்பாடுகளுடன் கூடியது.
இங்குள்ள தூண்களில் கண்ணன் கோபிகைகளுடன் செய்யும் லீலைகள், ரதி, மன்மதன், மோகினி பின்னால் செல்லும் தாருகாவனத்து முனிவர்கள், இராமனை தோளில் சுமந்து செல்லும் அனுமன் போன்ற பல்வேறு அழகிய சிற்பங்களைக் கொண்டுள்ளது....

இந்த அழகையெல்லாம் பருகிக்கொண்டு உள்ளே நுழையும் பொழுது மிகப்பெரிய மரத்திலான கதவுகள் பல மர சிற்பங்களுடன் நம்மை வரவேற்கின்றது, உள்ளே நுழைந்ததும் நாம் காண்பது, குரங்குகள் செய்யும் அட்டகாசம், பூதங்கள் செய்யும் கேளிக்கைகள், பல முனிவர்களின் சிலைகள்,மோகினி வடிவங்கள் இவற்றை கொண்டுள்ள தூண்களையும், இரண்டு பெரிய இசை தூண்களையும் தான்.
இவற்றைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் அருள்மிகு கருணை வடிவான காந்திமதி அம்மையின் திருக்கோலத்தை காணலாம்.
கயிலையிலிருந்து தலைவனைப் பிரிந்து வந்து தென் கோடியில் மூங்கில் காட்டிற்குள் தவம் செய்து மீண்டும் தலைவருடன் இணைந்த அற்புதமான தலைவி .
மதி என்றால் நம் அனைவருக்கும் நினைவு வருவது முழுமதி தான், முழுமதியே பேரழகு , காந்தி பெற்ற முழுமதி என்றால் கேட்கவா வேண்டும்,அவ்வளவு அழகு பொருந்திய மதி வதனமுடைய காந்திமதி அம்மையை நெல்லையில் உள்ள மக்கள் தாயாக மட்டுமல்லாது தன்குழந்தையாகவும் பாவித்து காந்திமதியம்மைக்கு வளைகாப்பு விசேஷங்கள் நடத்துவது மிகவும் சிறப்பான ஒரு விழாவாக நடைபெறுகிறது.

எவ்வளவுதான் நம் தந்தை மீது பாசமும் அன்பும் வைத்திருந்தாலும் ஒரு சிறிய பயம் மனதிற்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது ,ஆனால் அன்னையிடம் எந்தவிதமான தயக்கமும் இன்றி நம் பாசத்தையும் தேவைகளையும் வெளிப்படுத்த முடிகிறது .........🙂🙂
காந்திமதி அன்னையுடன் சில பல ரகசியங்கள் பேசிவிட்டு, வேணுவன நாதரிடம் நமக்காக உள்ள வேண்டுதலையும் சொல்லுமாறு தெரிவித்துவிட்டு வெளியே வந்து உள்சுற்று சுவற்றில் உள்ள பல புடைப்புச் சிற்பங்களையும் கண்டு கொண்டே வெளியில் வந்து இடது புறமாக திரும்பினால் சங்கிலி மண்டபத்தை அடையலாம்.
17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வடமலையப்பபிள்ளை என்பவரால் தனித்தனியாக கட்டப்பட்டிருந்த நெல்லையப்பர் கோயிலையும், காந்திமதி அம்மன் கோயிலையும் இணைப்பதற்காக கட்டப்பட்ட மண்டபம் என்பதால் இது சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் உள்ள தூண்களில் உள்ள மிகப்பெரிய சிலை வடிவங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது, உள்நுழைந்ததும் வலது புறத்தில் சாஸ்தாவிற்கு தனியா சிறிய கோயிலும் இடது புறத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகனுக்கு சிறிய கோயில் ஒன்று உள்ளது அதுபோன்று வலதுபுறத்தில் பண்டாசுர மர்த்தினி அம்மன் கோயில் வடக்கு நோக்கி பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது,மிகவும் அழகு பொருந்திய இந்த சிற்பம் கையில் பல ஆயுதங்களுடன், அசுரனை கொல்லும் காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது .மிகவும் நேர்த்தியாக காணப்படும் இந்த சிலை தஞ்சையில் உள்ள நிசும்பசூதனி அம்மனை ஒத்து காணப்படுகின்றது.
இந்த சங்கிலி மண்டபத்தில் வடக்குப் புறமாக சென்று

நெல்லையப்பர் கோயிலின் மூன்றாவது பெரிய சுற்றில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடைந்து இடது புறமாக சென்றால் ஆறுமுகநாயனார் கோயிலும்,வலது புறமாக சென்றால் சைலப்பர் கோயிலையும் அடையலாம்.....
இந்தக் கோயிலுக்காக பத்தாம் நூற்றாண்டில் சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன்(946 - 966) ஆட்சியில் பக்தையொருவள் விளக்கு எரிப்பதற்காக நிவந்தம் அளித்தது மிகப்பழமையான கல்வெட்டாகும்.
அதற்குப் பிறகு முதலாம் ராஜேந்திர சோழர் (1012-1044)மற்றும் முதலாம் குலோத்துங்க சோழரின்(1070 -1120) நிவந்தங்களையும் இக்கோயில் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்து பாண்டிய நாட்டை ஆட்சி செய்த
சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1238 - 1250) காலத்தில் நில தானம் அளித்த கல்வெட்டு ஒன்று 'திருநெல்வேலி உடைய நாயனார்' என்று நெல்லையப்பரை குறிக்கின்றது,
மேலும் வீர சங்கிலி மார்த்தாண்ட வர்மன் அவர் 16ஆம் நூற்றாண்டில் இசை தூண் மண்டபத்தை உருவாக்கினார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
மேலும் வீர சங்கிலி மார்த்தாண்ட வர்மன் அவர் 16ஆம் நூற்றாண்டில் இசை தூண் மண்டபத்தை உருவாக்கினார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பராக்கிரம பாண்டியரின் கல்வெட்டில் வேணுவனநாதர் என்று நெல்லையப்பரை குறிப்பிட்டுள்ளனர்.
கடைசியாக வீரபாண்டிய கட்டபொம்மனும் இந்த கோவிலுக்கு நிவந்தம் அளித்ததாக செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ள பல்வேறு பேரரசர்கள், அரசர்கள், சிற்றரசர்கள் ,அரசு அதிகாரிகள் ,வணிகர்கள் பெரும் குடியானவர்கள் ஆகியவர்களின் நிவந்தங்களை பெற்று சிறப்பானதொரு வரலாற்றுப் பாதையில் பயணித்து இருக்கும் காந்திமதி நெல்லையப்பர் திருக்கோயில் தமிழகத்தின் தலைசிறந்த, பிரமிக்கத்தக்க, கலைநயமிக்க ஒரு கோயில் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.....🙂🙂🙏🙏🙏
#திருநெல்வேலி ,
#நெல்லையப்பர்_திருக்கோயில் ,
#காந்திமதிநெல்லையப்பர்_திருக்கோயில்,
#இசைத்தூண்கள்,
#நெல்வேலி,
#தாமிரசபை,
#வரலாற்றுப்_பயணங்கள்
#நெல்லையப்பர்_திருக்கோயில் ,
#காந்திமதிநெல்லையப்பர்_திருக்கோயில்,
#இசைத்தூண்கள்,
#நெல்வேலி,
#தாமிரசபை,
#வரலாற்றுப்_பயணங்கள்
- காந்திமதி அம்மன் கிழக்கு ராஜகோபுரம்
- ஊஞ்சல் மண்டபம்
- தெப்பக்குளம் மற்றும் நீராழி மண்டபம்
- தெப்பக் குளத்தை சுற்றியுள்ள கல்தூண் மண்டபம்
- மீனாட்சி சுந்தரேஸ்வரர்
- நந்தி மண்டபத்தில் உள்ள சிற்பங்கள்
- பசு சிவலிங்கத்தை வணங்கும் சிற்பம்
- அனுமன் சிவலிங்கத்தை வணங்கும் சிற்பம்
- காந்திமதி அம்மன் சன்னதியில் உள்ள இசைத் தூண்கள்
- தூண்களில் உள்ள புடைப்புச் சிற்பம்
- சங்கிலி மண்டபத்தில் உள்ள அழகான கல்தூண்
- நெல்லையப்பர் கோவிலில் இருந்து காந்திமதி அம்மன் கோயிலுக்கு சங்கிலி மண்டபம் மூலமாக நம்மை வரவேற்கும் சிலை
- சங்கிலி மண்டபத்தில் உள்ள அழகிய சிலை
- காந்திமதி அம்மன் கோவிலில் உள்ள நந்தி மண்டபமும் அழகிய நந்தியும்
- சங்கிலி மண்டபத்தில் உள்ள அழகான சிலைகள்
- நந்தி மண்டபத்தில் உள்ள ரதி மன்மதன்
- ஐராவதத்தில் வஜ்ராயுதம் துடன் இந்திரன்
- அனுமனும் இராமனும்
- இரண்டு தலை நான்கு உடல் கொண்ட மந்திச்சிற்பம்
- கைலாயத்தை பெயர்த்தெடுக்கும் தசகண்ட ராவணன் சிவன் பார்வதி மற்றும் பூத கணங்களுடன் உள்ள அழகிய புடைப்புச் சிற்பம்
- சங்கிலி மண்டபத்திலிருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் வழி
- சாஸ்தா
- பண்டாசுரமர்த்தினி (காளி ) — with Alkesh Zaveri.
No comments:
Post a Comment