Tuesday, December 24, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:27-ஹொய்சாலேஸ்வரர்_திருக்கோயில்,ஹளபீடு

மூன்று நூற்றாண்டுகளாக ஹொய்சாள பேரரசின் தலைநகராக விளங்கிய ஹளபீடு என்னும் ஊரில் அமைந்துள்ள ஹோய்சாலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சிற்ப அதிசயங்கள்......
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த விஷ்ணுவர்த்தன்(1108 -1152) என்னும் அரசன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம்.
மக்னீசியம் சிலிகேட் என்னும் சோப்புக்கல் பாறையை பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டியிருக்கின்றனர்.
பல படையெடுப்புகளின் தாக்குதலை சமாளித்து, அழிவின் விளிம்பிற்குச் சென்று மீண்டிருக்கும் இந்த அற்புதமான திருக்கோவில் , உண்மையில் ஒரு கலைக்களஞ்சியம் தான் என்பதை அங்குள்ள பெரிய மற்றும் சிறிய சிற்பங்களும் , பல நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் நிரூபிக்கின்றன...
சற்றும் வளைவுகள் இல்லாத கட்டிடம், வளைவுகளை தவிர வேறு ஒன்றும் இல்லாத தூண்கள் . ஏறக்குறைய ஒவ்வொரு தூண்களும் வித்தியாசமான வடிவமைப்பில்...

  • கோவிலின் வடக்குப் புற நுழைவாயில். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த வாயிலும், கோவிலின் தென்புற வாயில் ஒரே நேராக இடையில் எந்தவிதமான கட்டுமானங்களும் இல்லாமல் அமைந்திருக்கும்.
  • நர்தன கணபதி
  • ஆபரணங்களை ஆடையாக அணிந்து சாமரம் வீசும் ஆரணங்கு
  • உள்ளேயும் வெளியேயும் காணப்படும் நந்திகள்
  • வினோதமான விதானங்கள்
  • புடைப்புச் சிற்பங்களால் இறுகத் தழுவி காணப்படும் வினோதமான விதானங்கள்,
  • ஒரே வரிசையில் காட்சியளிக்கும் அழகிய மூர்த்திகளின் புடைப்புச் சிற்பங்கள்
  • மயிலின் மீது அமர்ந்திருக்கும் முருகப்பெருமான்
  • கஜத்தின் தலை மீது நடனமாடும் சிவன்
  • சிவன் பார்வதி மையத்தில் அமர்ந்திருக்க, இடதுபுறத்தில் விநாயகர், ஆறுமுகன், மகாவிஷ்ணு , நான்முகன் அமர்ந்திருக்க வலதுபுறத்தில் கோலாகலமான நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு அழகான காட்சி.
  • ஆயுத பாணியாக நடனமிடும் மூர்த்தி
  • மரா மரங்களைத் துளைத்து சுக்ரீவனுக்கு தன் சக்தியை வெளிப்படுத்தும் ராமன்
  • சிவன் மற்றும் அர்ஜுனனுக்கு இடையே நடைபெறும் போராட்டம்
  • ஏழு தலை பாம்பு குடை பிடிக்க காட்சி அளிக்கும் மூர்த்தி
  • யாசகம் கேட்கும் வாமனர் மகிழ்ந்து அளிக்கும் பிரகலாதனின் அன்பு பேரன்
  • பிரம்ம லோகத்தை தன் காலால் அளக்கும் உலகளந்தபெருமாள் பணிவுடன் அமர்ந்திருக்கும் மகாபலி சக்கரவர்த்தி
  • ரிஷபத்தில் அமர்ந்திருக்கும் அம்மையப்பன்
  • கோவிலின் தெற்குப் புறத்தில் அமர்ந்திருக்கும் விநாயகமூர்த்தி
  • காலைக் கதிரவனின் இளம் வெயிலில் பிரதிபலிக்கும் திருக்கோவிலின் சுற்றுச்சுவர்
  • வசீகரிக்கும் அழகுச் சிலை
  • கிழக்குப் புறத்தோற்றம்
  • சற்றும் வளைவுகள் இல்லாத கட்டிடம், வளைவுகளை தவிர வேறு ஒன்றும் இல்லாத தூண்கள் . ஏறக்குறைய ஒவ்வொரு தூண்களும் வித்தியாசமான வடிவமைப்பில்...
  • கம்பீரத்துடன் காட்சியளிக்கும் சுற்றுச் சுவரில் ஒரு பகுதி
  • ஹோய்சாலேஸ்வரர் திருக்கோயிலின் கிழக்குப் புறத்தில் காணப்படும் அலங்கரிக்கப்பட்ட சுற்றுச் சுவரின் ஒரு பகுதி
  • பல வித வடிவங்களைக் கொண்டு, கண்ணைக்கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தூண்களை கொண்ட பெரிய முகப்பு மண்டபம்
  • விதானத்தில் பூத்த கமல மலர்கள்
  • கோயிலின் உள் அழகைப்பார்க சாளரத்தின் ஊடே விரைந்து ஊடுருவும் சூரியக் கதிர்கள்
  • என்ன ஊரு எடுப்பான அழகு , உதட்டில் மட்டும் லேசாக புன்னகை பூத்திருந்தால்.....
  • பத்து கரங்களில் பல்வேறு ஆயுதங்களுடன் சிம்மத்தில் வந்து மகிசாசுரனை வதம் செய்யும் மகிஷாசுரமர்த்தினி
  • பத்து கரங்களில் பல்வேறு ஆயுதங்களுடன் சிம்மத்தில் வந்து மகிசாசுரனை வதம் செய்யும் மகிஷாசுரமர்த்தினி



No comments:

Post a Comment

Popular Posts