அதிசயத்தை அள்ளித் தெளிக்கும் குடமூக்கு கீழ்க்கோட்டத்தில் .....
தும்பிகளினால்
முழுமையாக உறிஞ்சபடாத தேனைக்கொண்ட , வாசமிக்க மகரந்தத்தூள்களை
சுமந்துவரும் தென்றல்,
அழகாக வளர்ந்திருக்கும் இளம் கொடியின் மீது தவழ்ந்து செல்லுவது மட்டுமல்லாமல் , அழகிய பிறைமதி அந்த கொடிகளை தழுவி நிற்கக்கூடிய, அழகிய குடமூக்கு ஊரில் அமைந்துள்ள கீழ்க்கோட்டமுடைய நாயனார் என்று அப்பர் பெருமானே தன்னை மறந்து இயற்கை எழிலில் லயிக்கவைத்த கும்பகோணம்
நாகேஸ்வரர் திருக்கோயில்.

குளுமையான இளங்காலை வேளையில் குடந்தை நகரின் மத்தியில் அமைந்திருக்கும்
கீழ்க்கோட்டம் என்னும் பெயருடைய நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின்
ராஜகோபுரத்தில் அமைந்துள்ள பல்வேறு விதமான சிலைகள் நம்மை அதீத சிந்தனைகளுக்கு
ஆட்படுத்திவிடுகிறது. அந்த சிந்தனையில் தேடல்களுக்கு வித்திட்டன , வித்திட்ட தேடலில் கிடைத்த விவரங்கள் ஏராளம் ,அவற்றை சொற்பமான சில வரிகளால் சொல்ல இயலாது.
கஜுராஹோ காம சிற்பங்களையும் மிஞ்சும் அளவிற்கு சிற்பங்களைக் கொண்டது இந்த ராஜகோபுரம்.
சைவ சமயத்தின் ஒரு பிரிவாக விளங்கிய பாசுபத - காபாலிகர்கள்
,
காமத்தை யோகமாக (லயயோகம்) மாற்ற மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடுகளே, கோயில்களில் காணப்படும் காம சிற்பங்கள் என்று கூறுகின்றனர் . 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு அதன் பின்னர் வந்த நாயக்கர் கால அரசாங்கங்களும் எடுப்பித்த கோயில்களில் தெளிவாகவே காணமுடியும்...
நமது நாழிகைகளை கணப்பொழுதாகிய முகப்பைக் கடந்து உள்ளே சென்றால், இடது புறத்தில் சிங்கமுக கிணற்றையும் ,வலதுபுறத்தில் பெரிய நாச்சியார் அம்மன் தனி சன்னதியையும் நோக்கிவிட்டு இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்து வலது புறம் பார்த்தால் , காலச்சக்கரத்தைப் பூட்டியை இரண்டு குதிரைகள் தில்லைக்கூத்தன் நடராஜரின் சன்னதியை இழுத்துக் கொண்டிருப்பதை காணலாம்...

அதற்கடுத்து
மூன்றாவது சுற்றில் நுழையும் பொழுது பெரிய மண்டபமும், வலது மற்றும் இடது புறம் வெளியேற வாயில்களைக் கொண்ட மகா மண்டபமும் , முகப்பில் இரண்டு அழகிய துவாரபாலகர்கள் கொண்ட அர்த்த மண்டபமும் அர்த்த மண்டபத்தின் ஊடே , கருவறையில் பெரும்பாலான சோழப் பேரரசர்களின்
கவனத்தை ஈர்த்த கருணைக்கடலான
'கீழ்க்கோட்டத்து மகாதேவர்' அருள் பாலித்து கொண்டிருக்கிறார்...
'கீழ்க்கோட்டத்து மகாதேவர்' அருள் பாலித்து கொண்டிருக்கிறார்...
ஏழாம் நூற்றாண்டிலேயே மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்த இந்தத் திருக்கோவில் , ஒன்பதாம் நூற்றாண்டின்
இறுதிவாக்கில் மாமன்னர் முதலாம் ஆதித்தசோழன்(871 - 898) கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது...
மொத்தம் 54 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ள இந்த திருக்கோயிலில் ,மதுரையும் ஈழமும் வென்ற முதலாம் பராந்தக சோழன் ( 907 - 955 ) , இராஜகேசரி சுந்தர சோழர் (956 - 973), வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்( 956 - 969) , உத்தம சோழர் ( 973 - 985 ) , கங்கையும் ஈழமும் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன்( 1012 -1044 ), ராஜகேசரி முதலாம் ராஜாதிராஜர்
( 1018 - 1054),
ஈழமும் , மதுரையும் , கருவூரும் கொண்டருளிய திருபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்க சோழன்
( 1178 - 1218 ) ஆகியோர் காலத்து பல்வேறு நிவந்த கல்வெட்டுகளும், இந்தக் கோயிலுக்கு யாத்திரை வரும் பிரம்மச்சரிய பிராமணர்களுக்கு என்று தனி நிவந்தங்கள் கொடுக்கப்பட்ட கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

மேலும் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் காலம் வரை பல்வேறு நிவந்தங்களை பெற்றுவந்துள்ள
இத்திருத்தலம், இன்றும் முக்கியத்துவம் சற்றும் குறையாமல்
காணப்படுவதும் அதிசயமே ....
காணப்படுவதும் அதிசயமே ....
மகா மண்டபத்தில்
இருந்து வெளியேறி மூலஸ்தானத்தை சுற்றிவரும் பொழுது கோஷ்டத்தில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் பார்ப்பவர்கள் , ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும்
சற்று நின்று மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் அளவிற்கு கலை நயம் மிக்கதாக அமைக்கப்பட்டுள்ளது....
அதுமட்டுமல்லாமல் லேசாக மூச்சு காற்றின் வேகம் மாறுவதையும் உன்னிப்பாக கவனித்தால் உணர முடியும்....😜😜😜
அதுமட்டுமல்லாமல் லேசாக மூச்சு காற்றின் வேகம் மாறுவதையும் உன்னிப்பாக கவனித்தால் உணர முடியும்....😜😜😜
அதுமட்டுமல்லாமல் ராமாயணத்தில்
வரும் சில நிகழ்ச்சிகளை தத்துரூபமாக குறுஞ்சிற்பங்கள்
மூலம் வடிவமைத்து தங்கள்
நுண்கலையின் அறிவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.....🙂🙂
நுண்கலையின் அறிவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.....🙂🙂
மேலும் சுற்றுச் சுவரின் இடது புறத்தில் பல்வேறு லிங்கரூபங்கள்,
வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் ,கஜலட்சுமி, மகாலட்சுமி , சரஸ்வதி தேவியும் தனியே
சிறுசிறு சன்னதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்....
சிறுசிறு சன்னதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்....
ஸ்ரீபகவர் மகரிஷி மற்றும் சூரியதேவன் தனி சன்னதிகளும் சுற்றுப் பாதையில் அமைந்துள்ளது.
நவகிரக பரிகார ஸ்தலங்கள் மூலமாகவும், மகாமக குளத்தின் மூலமாகவும் இன்று குடந்தை நகரம் பிரசித்து பெற்று விளங்கினாலும், திருநாவுக்கரசர்
போன்ற சிவ ஞானப்பழத்தை ஈர்த்த இந்தக் கோயில் , அப்பொழுது மட்டுமல்லாமல்,
இன்றளவும் பலரையும் வசீகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது....🙂🙂
சற்றே கனமான பதிவுதான்🙏🙏
#கும்பகோணம்_மரபுநடை , #வரலாற்றுப்_பயணங்கள் ,
#திருநாவுக்கரசர் ,
#தேவாரம்_பாடல்பெற்ற_திருக்கோயில் ,
#அப்பர் ,
#தடயங்களைத்தேடி
#குடந்தைக்_கீழ்க்கோட்டம்
#முதலாம்_ஆதித்தசோழன்
#திருநாவுக்கரசர் ,
#தேவாரம்_பாடல்பெற்ற_திருக்கோயில் ,
#அப்பர் ,
#தடயங்களைத்தேடி
#குடந்தைக்_கீழ்க்கோட்டம்
#முதலாம்_ஆதித்தசோழன்
லயயோக ( புணர்ச்சி) சிற்பங்கள், மகப்பேறு சிற்பங்கள் ,பல புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்களையும் தாங்கி நிற்கும் நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் ராஜகோபுரம்...
ராஜகோபுரத்தின் வடக்கு புற தோற்றம்
நடராஜரின் தனி சந்நிதியில் எதிரே அமைந்துள்ள அழகிய விழா மண்டபம்
காலச்சக்கரத்தை பூட்டிய அழகிய திருத்தேர்
"கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேற் றுகில்"
கம்பீரமான போர்க்களிற்றின் தலையில் இரண்டு சிறிய குன்றுகள் போல் அமைந்திருப்பதை நாம் கண்டிருக்கலாம். அத்தகைய மத்தகஜததின் தலையின் மீது மிக மென்மையான பட்டுத்துணியை போற்றினால் எவ்வாறு தோற்றமளிக்கிமோ அதுபோல யவ்வனப் பெண்களின் தனங்கள் பூரித்து தாழாமல் பலமாக இருக்க வேண்டுமாம்.... ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு திருவள்ளுவரின் இத்தகைய கருத்தை மனதிற்கொண்டு , சிற்பிகளின் கைவண்ணத்தில் பாறையில் உருவான அழகிய தங்கப்பதுமை....🥰🥰🥰🥰

அளவான பாதங்கள் , அளவெடுத்த விரல்கள் , கணுக்காலுக்கு மேல் வரை அணிந்துள்ள மிகமெல்லிய கீழாடை , வார்த்தெடுத்தற்போல உள்ள மென்மையான அழகிய தொடைகள் , நீண்ட கால்கள் , கீழாடையை இருப்பில் நிறுத்தியிருக்கும் அழகிய அணிகலன்கள், சற்றே சிறுத்த இடை, வழுவழுத்த வயிறு, பார்த்தவுடன் கிறங்கடிக்க செய்யும் தாழாத மார்பகச் சோலைகள் , நீண்ட கரங்களின் ஒய்யார அமைப்புகள், அதில் அணிந்துள்ள ஆபரணங்கள், இடது கையில் தாங்கி நிற்கும் ஓர் அழகிய மலர் , கழுத்திலும் , காதிலும் மறைந்துள்ள மணி அணிகலன்கள்,
நீண்ட கூரான நாசி சுண்டியிழுக்கும் பார்வை , வளைந்து நிற்கும் புருவங்கள், லேசாக புன்னகைக்கும் இரண்டு இதழ்க்கவிதைகள்.....
ஏன் இந்த மனம், இந்த கற்சிலையை கண்டு இப்படி பதைபதைக்கிறது .....
ஆம் இது மண்ணுடலானது , கல்லைக் கண்டதும் பரவசம் அடைகிறது....❤❤❤❤

ஆக்ரோஷமாக தொடங்கிய போர் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தாக வேண்டும் அல்லவா ??? நேரம் மெல்ல மெல்ல உருண்டு ஓடுகிறது, சிறுக சிறுக வேகமும் குறைந்து கொண்டே வருகிறது...
வாள் கொண்டு பகைவர்கள் உடன் செய்யும் போர் அல்ல இது....
சிற்ப பிரம்மாகளின் கையில் உள்ள பிரம்மாஸ்திரமான கல்லுளிகளின் மூலம் கற்பாறைகளில் மீது
நடத்தப்படும் போர்....
ஆரம்பத்தில் உளிகளின் வேகம் அதிகமாக இருந்தாலும், மணித்துளிகள் அவற்றின் வேகத்தை குறைத்து , முடிக்கும் தருவாயில் உளிகளுக்கு கல்லின் மேல் ஏற்பட்ட காதலை வெளிப்படுத்தும் வகையில் சிற்பம் அமைந்து விடுகிறது...
அத்தகைய உன்னதமான உளி கொண்ட காதலில் வெளிப்பட்ட பெண்மையின் தோற்றமே இவள்....

கனம் தாங்காமல் துவண்டதோ இந்தக் காரிகையின் கொடியிடை ❤❤❤
காலங்கள் சிதைத்தால் என்ன.... நளினம் குறைந்துவிடுமா....
காலத்தின் கோலம் இந்த அழகுப் பதுமையை இவ்வாறு காண வேண்டியுள்ளது🙂🙂
காலங்கள் சிதைத்தால் என்ன.... நளினம் குறைந்துவிடுமா....
காலத்தின் கோலம் இந்த அழகுப் பதுமையை இவ்வாறு காண வேண்டியுள்ளது🙂🙂
ராஜகோபுரத்தின் விதானத்தில் காணப்படும் வண்ணமயமான அழகோவியங்கள்🥰🥰
ஸ்வஸ்திஸ்ரீ பண்டியன்தலை கொண்ட கோப்பரகேசரி....
மாமன்னர் ராஜேந்திர சோழரின் உத்திராபத போரில் மகிபாலனை (988 - 1038 ) வென்று போது போரில் நினைவுச்சின்னமாக கொண்டுவரப்பட்ட கங்கைகொண்ட கணபதி ...
வெற்றிச் சின்னங்கள் என்றுமே நமது பெருமையை பறை சாற்றுகின்றன
அர்த்தமண்டபம் நுழைவாயிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது....
தகவல் : Gopal Balakrishnan
வெற்றிச் சின்னங்கள் என்றுமே நமது பெருமையை பறை சாற்றுகின்றன
அர்த்தமண்டபம் நுழைவாயிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது....
தகவல் : Gopal Balakrishnan
முகத்தில் வசீகரிக்கும் புன்னகையை கல்லில் ஏற்படுத்த இப்படித்தான் கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை....
பார்த்தவுடன் மதி மயங்க வைக்கிறார்
பார்த்தவுடன் மதி மயங்க வைக்கிறார்
நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் மூன்றாவது சுற்றில் அமைந்துள்ள மண்டபத்தின் ஒரு
பகுதி
நாகேஸ்வரர் திருக்கோயிலின் கர்ப்ப கிரகத்தை சுற்றியுள்ள சுற்றுப்பாதையின் வடமேற்கு மூலை
இச்சா மற்றும் கிரியா சக்திகளுடன் முருகப்பெருமான்
சிங்கமுக நுழைவாயில் கொண்ட அழகிய கிணறு
ராமாயணக் கதை சொல்லும் குறிஞ்சிற்பம்
தனி சன்னதியில் வீற்றிருக்கும் சூரியதேவன்
No comments:
Post a Comment