Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 48:மகிஷாசுரமர்த்தினிகுடைவரை,மாமல்லபுரம்,


ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மாமன்னர் நரசிம்ம போத்தரசரால் எடுக்கப்பட்ட மகிஷாசுரமர்தினி குடைவரையில் இருந்து சில புகைப்படங்கள்...

மகிஷாசூரனை எதிர்த்து போர் புரியும் கம்பீரமான சிம்மவாஹினியின் பக்கமிருக்கும் பூதகணங்களில் ஒன்று சாமரம் வீசிக் கொண்டிருப்பது போலவும், ஒன்று குடை பிடித்துக் கொண்டிருப்பது போலவும் ,ஒன்று உணவுத் தட்டை சுமந்தது போலவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது...

மகிஷாசூரனின் போர் வீரர்களில் ஒருவன் மேலிருந்து கீழாக சிம்மவாஹினியின் வீராங்கனை ஒருவரை தாக்கும்போது அவள் தலைக்கு மேலே தன் கத்தியை பிடித்து அவன் தாக்குதலை தடுக்கும் ஒரு காட்சியும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.....

மேலும் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த விஷ்ணுமூர்த்தியை மிக பவ்வியமாக வணங்கும் பெண் மற்றும் காலருகே இரண்டு கம்பிரமான ஆயுதம் ஏந்தி நிற்கும் வீரர்கள் ஒரு புறத்திலும் ...

சோமாஸ்கந்தர் ,பார்வதி விஷ்ணு ,பிரம்மா மற்றும் முனிவர்கள் சிற்பம் சிறு கோயிலாகவும் இந்த குடைவரையில் உள்ளது.இந்த கோயிலுக்கு முன்னால் சிறு மண்டபமும் சற்றே உயரமாக காணப்படுகிறது.
இக் கோவில் கர்பகிரகம் மற்றும் சற்றே உயர்ந்த முகமண்டபம் அமைப்பில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு குடவரைக் கோயில்கள் சிற்பம் ஏதும் இல்லாமல் நன்மை ஏமாற்றுகிறது...

எவ்வளவு தத்ரூபமான பல்லவர்கால குடவரை புடைப்புச் சிற்பங்கள்🙂🙂

#மகிஷாசுரமர்த்தினிகுடைவரை
#நரசிம்மபல்லவர் (630 -668 )
#மாமல்லபுரம்
#மல்லைகுடைவரை
#கடல்மல்லை
#செலிபரேட்_காஞ்சி
#வரலாற்றுப்_பயணங்கள்



  • மகிஷாசுரமர்த்தினி குடவரை புடைப்புச் சிற்பம்
  • சாமரம் வீசும் பூதம்
  • மகிஷாசுரன் பக்கத்தில் இருக்கும் போர்வீரன்
  • மகிஷாசுரனை பிரம்மாண்டத்தை காட்ட அருகிலிருக்கும் போர்வீரர்களின் சிறுசிறு உருவ சிற்பமாக காட்டியுள்ளனர் போலும்....
  • ஆதிசேஷனின் ஸ்யனித்திருக்கும் விஷ்ணு மூர்த்தி
  • வணக்கத்தின் உச்சம்:
பூமாதேவி ...ஆழிக்காலத்தில் அந்த இரண்டு அசுரர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க விஷ்ணு பகவானிடம்பாத சரணம் அடைகிறாள்...இதே போன்ற குடைவறை சிற்பம் திருமயம் சத்யநாராயணர் கோவிலில் உள்ளது! அதில் ஆதிசேடன் தன் நாக்கிலிருந்து புறப்படும் அக்னியால் அவர்களை விரட்டியடிப்பது போல செதுக்கி இருப்பர்!!
  • மகிஷாசுரமர்த்தினி குடவரை மற்றும் பழைய கலங்கரை
  • குடவரை சுவற்றை ஏறக்குறைய சமமான இரண்டு பாகங்களாக பிரித்து பார்த்தால் ஒன்றில் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியின் பக்கத்து சேனை





No comments:

Post a Comment

Popular Posts