வரலாற்றுப்_பயணங்கள் 14:ஹொய்சாலேஸ்வரர்_திருக்கோயில்,ஹளபீடு
மூன்று நூற்றாண்டுகளாக ஹொய்சாள பேரரசின் தலைநகராக விளங்கிய ஹளபீடு என்னும் ஊரில் அமைந்துள்ள ஹோய்சாலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சிற்ப அதிசயங்கள்......
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த விஷ்ணுவர்த்தன்(1108 -1152) என்னும் அரசன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம்.
மக்னீசியம் சிலிகேட் என்னும் சோப்புக்கல் பாறையை பயன்படுத்தி இந்தக் கோயில் கட்டியிருக்கின்றனர்.
பல படையெடுப்புகளின் தாக்குதலை சமாளித்து, அழிவின் விளிம்பிற்குச் சென்று மீண்டிருக்கும் இந்த அற்புதமான திருக்கோவில் , உண்மையில் ஒரு கலைக்களஞ்சியம் தான் என்பதை அங்குள்ள பெரிய மற்றும் சிறிய சிற்பங்களும் , பல நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் நிரூபிக்கின்றன...
சற்றும் வளைவுகள் இல்லாத கட்டிடம், வளைவுகளை தவிர வேறு ஒன்றும் இல்லாத தூண்கள் . ஏறக்குறைய ஒவ்வொரு தூண்களும் வித்தியாசமான வடிவமைப்பில்...
No comments:
Post a Comment