குடந்தை , மரபு நடைக்கு முன்னால் - 3
திருக்காட்டுப்பள்ளி மற்றும் செந்தலை
முழுமையாக வயல் மற்றும் வனங்களால் சூழப்பட்ட திருச்சென்னம்பூண்டியிலிருந்து கிளம்பி திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரை அடையும்போது கதிரவனின் ஒட்டுமொத்த வெப்பக்கதிர்வீச்சுயையும் நம் மீது வாரி இறைத்துக் கொண்டிருந்த உச்சிவேளை.
என்ன ஒரு ஆச்சரியம் திருக்காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் பெயர் அக்னிஸ்வரர், இது தற்செயலாக அமைந்திருக்கலாம் இருந்தாலும் வெப்பத்தின் உக்கிரம் சற்றே அதிகம் தான்🙂🙂
என்ன ஒரு ஆச்சரியம் திருக்காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் பெயர் அக்னிஸ்வரர், இது தற்செயலாக அமைந்திருக்கலாம் இருந்தாலும் வெப்பத்தின் உக்கிரம் சற்றே அதிகம் தான்🙂🙂
கோயிலில் உச்சிகால நடை சாத்தும் தருவாயில் உள்நுழைந்து கொடிமரம், பலிபீடம் மற்றும் பாதாள நந்தியையும் , கடந்து உள்ளே சென்று வார்கொண்ட வனமுலையாள் உடனுறை தீயாடியப்பரை தரிசித்துவிட்டு வேகமாக வெளியேறிய வேண்டிய நிர்பந்தத்தினால் சற்று அவசரமாகவே கோயில் பிரகாரத்தை சுற்றி விட்டு வெளியேறினோம்.
அப்பர் பெருமான் , செல்வம் மற்றும் பொய்யினால் ஏற்படும் இன்பத்தைத் துறந்து இறைவனை அடைய இத்தலத்தின் தேவாரப் பதிகங்களின் மூலம் நம்மிடம் வலியுறுத்துகின்றர்.
திருஞானசம்பந்தரோ, வானளாவி உயர்ந்து வசீகரிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் வனம் என்றும், வாசமிக்க பூக்களையுடைய வனம் என்றும் தம்முடைய தேவார பதிகங்களில் சிலாகிக்கின்றார்.
இவ்விரு சைவக் குரவர்களால், தேவாரப்பதிகம் பாடல் பெற்ற இந்த திருக்கோயில் ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருந்தாலும், எட்டாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் ஆதித்ய சோழனால் கற்றளியாக மாற்றப்பட்ட பல கோயில்களில் இதுவும் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் உத்தம சோழர், ராஜராஜ சோழர், அதற்குப் பிற்பாடு நாயக்கர் காலத்திலும் பல்வேறு புனரமைப்பு பணிகள் இங்கே நடைபெற்றிருக்கின்றன.
இந்த சிறு முன்னோட்டதுடன் இந்த கோயிலிலிருந்து விடைபெற்று செல்ல வேண்டியதாயிற்று.
திருக்காட்டுப்பள்ளியில் தான் காவேரி ஆறு தன்னை ஒரு கிளை நதியாக பிரித்துக்கொண்டு குடமுருட்டியாகவும், காவிரி ஆறகவும் செல்லுகின்றது.
அழகிய குடமுருட்டி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயிலில் இருந்து கிழக்குப் புறமாக 5 கிலோமீட்டர் தூரம் சென்று, பிற்காலப் பல்லவர்கள் மற்றும் சோழர்கள் வரலாற்றை இணைக்கும் மிக முக்கியமாக பாலமாக கருதப்படும் , முத்தரையர்களின் தலைநகரமாக அனுமானிக்கப்படும் ஊர்களில் ஒன்றான செந்தலையை அடைந்தோம்.
ஏழுநிலை பதினோரு கலசங்கள் கொண்ட ராஜகோபுரத்தை கடந்து உள் நுழைந்ததும் நேராக கொடிமரம் மற்றும் பலிபீடமும் அதற்கு அடுத்து தெற்கு நோக்கி அமைந்துள்ள அம்மன் சன்னதியில் மிகப் பெரிய மண்டபத்தில் உள்ள நந்தியையும் கடந்து அடுத்த பிரகாரத்தினுல் நுழையும்போது , முதலில் முகப்பு மண்டபம் அழகிய வேலைப்பாடுகளுடன் விதனத்தை தாங்கி நிற்பது மட்டுமல்லாமல் முத்தரையர்களின் பல கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கின்றது.
இங்குள்ள கல்வெட்டு இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரான சுவரன் மாறன்னின் (705 - 745) வீரச் செயல்கள், தந்தை மற்றும் பாட்டன் பெயர்களையும் எடுத்துரைக்கின்றது.
பெரும்பிடுகு முத்தரையரான குவாவன் மாறன் ,இவன் மகன் இளங்கோவதிரையான மாறன் பரமேஸ்வரன், இவன் மகன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆன சுவரன் மாறன்.....
பாண்டிய மன்னன் மாறன் சடையன் (765 - 815 ), தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் (825 -850) போன்றோரது நிவந்த கல்வெட்டுகளும் காணகிடைகின்றது.
முத்தரையர்கள் ஆட்சி முடிந்து 9ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சோழர்கள் ஆட்சி தொடங்கிய பிறகு,
முதலாம் ஆதித்த சோழன் (871 - 907) காலத்தில் இக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு, நந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தமும், பாரதம் கதை சொல்ல நிவந்தமும் அளித்துள்ளனர். முதலாம் பராந்தகர் (907 - 955) மற்றும் இரண்டாம் ஆதித்தன் (956 - 965) நிவந்த கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன.
முதலாம் ஆதித்த சோழன் (871 - 907) காலத்தில் இக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு, நந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தமும், பாரதம் கதை சொல்ல நிவந்தமும் அளித்துள்ளனர். முதலாம் பராந்தகர் (907 - 955) மற்றும் இரண்டாம் ஆதித்தன் (956 - 965) நிவந்த கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன.
முகப்பு மண்டபத்திலிருந்து அடுத்த மண்டபத்திற்குள் நுழையும் பொழுது, நுழைவாயிலின் இடது புறத்தில் கணபதியும் , வலது புறத்தில் முருகனும் மேலும் இரண்டு துவாரபாலகர்கள் நம்மை வரவேற்க ,அடுத்து வரிசையாக அமைக்கப்பட்ட வேலைப்பாடுகள் அமைந்த தூண்களையும் கடந்து மகா மண்டபத்திற்குள் நுழையும்போது அழகிய நந்தியும், அர்த்த மண்டபத்தின் வாசலில் இருந்து சோழர் காலத்தில் சிற்பக் கலையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இரண்டு துவாரபாலகர்கள் நம்மை வசீகரிக்கின்றன .
சிறிய அர்த்த மண்டபமும் அடுத்த கருவறையில் சந்திரரேகை சதவீத மங்கலத்து திருப்பெருந்துறை மகாதேவர் என்னும் சுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
சிறிய அர்த்த மண்டபமும் அடுத்த கருவறையில் சந்திரரேகை சதவீத மங்கலத்து திருப்பெருந்துறை மகாதேவர் என்னும் சுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
மகா மண்டபத்தில் இருந்து இடதுபுறம் மற்றும் வலது புறத்தில் கர்ப்பக்கிரகத்தை சுற்றி வருவதற்கு என்று வழி அமைக்கப்பட்டிருக்கின்றது. இடது புறமாக சென்று கோஷ்டத்தின் தெற்குச் சுவரை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் மிக முக்கியமான எங்கும் காண முடியாத நான்கு தலைகளை உடைய வாகீசர் சிற்பமும் , அருகே நான்முகன் சிற்பமும் காணப்படுகின்றது. வசீகரிக்கும் சிவனின் ஒரு ரூபமாக கருதப்படும்
இவ்வாகீசர் சிற்பம் , கருவறையை நோக்கியபடி உடலும் ஒரு தலையும், மேலுமுள்ள மூன்று தலைகள் மற்ற மூன்று திசைகளையும் நோக்கியவாறு அமைந்துள்ளது.
இவற்றையெல்லாம் தரிசித்து விட்டு வெளியே வந்து அம்மன் சந்நிதியின் மண்டபத்தூணில் இருந்த நீண்ட கூந்தலை உடைய ஆரணங்கு ஒருத்தியை புகைப்படம் எடுக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நாம் அபிநயம் பிடிக்க வேண்டிய நிலை வந்தது , சூரிய பகவானின் லீலை தான் காரணம். வாகீசரயையும், மகாதேவரையும் கண்ட மகிழ்ச்சியில் வெளியேறி காரின் அருகே வந்தபோது வாயு பகவானின் வைகாசி மாதத்தின் லீலைகளையும் காரின் மீது நன்றாக காணும்படி இருந்தது.... வெயிலின் உக்கிரத்தை அருகே இருந்த ஒரு சிறிய கடையில் சற்றே தணித்துக்கொண்டு மீண்டும் கிழக்கு நோக்கி பயணித்து நந்திபுரம் என்னும் திருக்கண்டியூரை கடந்தபோது, உடன்வந்த வரலாற்றாசிரியர்களின் வாய்மொழியில் லேசாக தொண்டைமண்டல வாடை அடித்தது🙂🙂🙂 ....அது.....
சிம்ம விஷ்ணுவின் வம்சாவழியில் வந்த பல்லவர்களின் ஆட்சிகாலம் முடிந்து , இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் காலம் வரை , இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்களை தன்னுள்ளே ஆழமாக பதித்து இருக்கும் இந்த ஊர் திருக்கண்டியூர் . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஊராகும்.
இங்கிருந்து இடதுபுறமாக திரும்பி, குடமுருட்டி மற்றும் காவிரி ஆற்றை கடந்து திருவையாற்றில் ஒரு சிறிய உணவகத்தில் அமர்ந்தோம்.
பத்து பேர் அமர்ந்து உணவு உண்ணும் சிறிய உணவகம் தான், இருந்தாலும் அவர்கள் விரித்த வாழை இலையிலேயே மெய் மறந்து போனோம். அருமையான, பதமான சைவ உணவை உண்டு, உணவு தந்த ருசியின் காரணத்தால் அவர்களிடம் மரபு நடைக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய முடியுமா என்று விசாரிக்க அவர்களும் மனமகிழ்வுடன் ஒப்புக்கொள்ள வயிறும் , மனமும் நிறைய அங்கிருந்து விடைபெற்றோம்.
நாம் வாழும் நாட்களில் ஒரு சில , நமக்கு அதிசயங்களை தருவதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது போல் தோன்றும். எனக்கும் அவ்வாறு தான் இருந்தது இன்று , பழமையான கோயில்களை சோழ வளநாட்டில் காண்பது ஒரு அருமையான தருணம் என்றால், மனதுக்குப் பிடித்த நண்பர்களோடு பயணிப்பதும் மற்றுமொரு அருமையான தருணம் என்றாலும் , நாம் பார்த்துப் பேசிப் பழகாவிட்டாலும் நம் மனதில் மதிக்கதக்க ஒருவரை நேரில் சந்திப்பதும் ஒரு அருமையான தருணம் தான் . அதுவும் எந்த வித திட்டமிடாத ஒரு நேரத்தில் இவ்வாறு நிகழ்வது பரவசத்தை ஏற்படுத்துகின்றது. அய்யன்பேட்டை என்னும் ஊரில் அந்த ஆசிரியரின் வீட்டிற்கு சென்றோம் , ஏற்கனவே ஓரிரு முறை அவரைப் பார்த்து இருந்தாலும், அவருடன் அதிகம் பழகியதில்லை . ஆனாலும் என்ன .... ஒரு வகுப்பிற்கு வரும் புது மானவனை வரவேற்கும் ஆசிரியரைப் போல மலர்ந்த முகத்துடன் வரவேற்று
தேவையானவற்றை தந்ததோடு அல்லாமல் எங்களுக்கு ஓய்வெடுக்கவும் ஏற்பாடுகள் செய்து தந்து
ஒரு ஆசிரியராக அல்லாமல்
தந்தையாகவே எங்களைக் கவனித்தார். என்னதான் களைப்பு நம்மை வாட்டி வதைதாலும் ஒரு சிறிய இடத்தில் நம்மால் எளிதாக ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது, சில தர்மசங்கடங்கள் ஏற்படலாம் . அப்படி ஒரு நொடி கூட நாம் சிந்திக்கமுடியாத அளவில் முழுமையாக அங்கு சென்ற அனைவரும் களைப்பு நீங்க ஓய்வெடுத்து , அருமையான தேநீர் அருந்திவிட்டு, அவரின் ஆசியைப் பெற்றுக் கிளம்பினோம்........🙂🙂
தேவையானவற்றை தந்ததோடு அல்லாமல் எங்களுக்கு ஓய்வெடுக்கவும் ஏற்பாடுகள் செய்து தந்து
ஒரு ஆசிரியராக அல்லாமல்
தந்தையாகவே எங்களைக் கவனித்தார். என்னதான் களைப்பு நம்மை வாட்டி வதைதாலும் ஒரு சிறிய இடத்தில் நம்மால் எளிதாக ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது, சில தர்மசங்கடங்கள் ஏற்படலாம் . அப்படி ஒரு நொடி கூட நாம் சிந்திக்கமுடியாத அளவில் முழுமையாக அங்கு சென்ற அனைவரும் களைப்பு நீங்க ஓய்வெடுத்து , அருமையான தேநீர் அருந்திவிட்டு, அவரின் ஆசியைப் பெற்றுக் கிளம்பினோம்........🙂🙂
No comments:
Post a Comment