குடந்தை , மரபு நடைக்கு முன்னால் - 2
திடீரென காற்றில் வரும் வாசத்தில் மாறுதல் , லேசான ஈரப்பதம் , ஜன்னல் கதவுகள் வழியாக வெளியே பார்க்கும் பொழுது காரணம் புரிந்தது....
எனது சாரதி (குமாரவேள்) காரை செலுத்திக் கொண்டிருந்த இடம் தான் தென்றலின் இந்த மாறுதலுக்குக் காரணம் .
சோழ மாமன்னர் "கரிகால் பெருவளத்தானின்" பெயரை இன்றளவும் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கும் கல்லணைக்கு தவழ்ந்து வந்த பொன்னி நதி , தன்னுடனே கொண்டு வந்த பல்வேறு நிலங்களின் மண் வாசனையும் , பல தாவரங்களின் நறுமணங்களையும் , பல நுண்ணுயிரிகளின் வாசனையையும் சேர்த்து மிதந்து வந்த தென்றலில் கலந்து நம் நாசியை அடைந்து பரவசப்படுத்தி கொண்டிருந்தது.

அதனைக் கடந்து சென்றால், சற்று தூரத்தில் பசுமையான நெல் வயல்களில் தேங்கி நிற்கும் நீரில் சூரியனின் வெப்பம் பட்டதால் ஏற்ப்பட்ட பசுமைகலந்த ஓர் வாசம்.......அப்பப்பா..... முதல்முறையாக, காவேரி கரையில் வசிக்கவில்லை என்ற ஒரு ஏக்கம் ...
நீரே ஓடவில்லை என்றாலும் ஆற்றங்கரையில் அமர்ந்து சுற்றி இருக்கும் இயற்கையை ரசிக்கும் ஆனந்தம் மிக அலாதி.
அப்படிப்பட்ட ஒரு எழில் கொஞ்சும் இடம் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருபோர் நகர் என்னும் கோயிலடி .
மிக பிரம்மாண்டமான கோயில்களை கட்டியிருப்பதற்கு காரணம் என்னவென்று நன்கு அவதானித்து யோசித்தால் ஓரளவு புரிய வரும். பெரும்பாலும் இயற்கை சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவே கோயில்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆற்றங்கரையில் இருக்கும் ஊர்களுக்கு ஏற்படும் அபாயத்தில் ஒன்று ஆற்றின் அதிகப்படியான வெள்ளநீர். அந்த வெள்ள நீரில் இருந்து மக்களை பாதுகாக்க காவிரி கரையில் பல கோயில்களை சோழ மன்னர்கள் அமைத்துள்ளனர். இந்தக் கோயில்கள் தரைமட்டத்தில் இருந்து 15 முதல் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு மாடக்கோயில்கள் என்று அழைக்கப்படுகிறது.

அத்தகைய மாடக்கோயில்களில் ஒன்றுதான் கோயிலடி என்னும் திருப்பேர் நகர் என்றும் அழைக்கப்படுகின்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அப்பக்குடத்தான் பெருமாள் கோயில். பஞ்சரங்க க்ஷேத்திரஞ்களிலே ஒன்றாக கருதப்படும் இக்கோயிலில் , நம்மாழ்வார் , திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
சயன கோலத்தில் கருவறையில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் மேற்கு நோக்கியும், முதல் சுற்றுக்கு வெளியே கமலவல்லி தாயார் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
சயன கோலத்தில் கருவறையில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் மேற்கு நோக்கியும், முதல் சுற்றுக்கு வெளியே கமலவல்லி தாயார் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பெரியாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்டிருப்பதால் , இந்தக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னதாக செங்கல் கட்டிடமாக இருந்து , சோழர்காலத்தில் கற்றளியாக புதிய பரிமாணம் பெற்று இருக்கின்றது. நாயக்கர் காலம் வரை பல்வேறு நிவந்தங்களை இந்தத் திருக்கோயில் பெற்றுள்ளது.
பேரரசுகளில் மாற்றம் ஏற்படுத்திய மிக முக்கியமான தரவுகளான "சோணாடு கொடுத்தருளிய சுந்தர பாண்டிய தேவர்" (1215 - 1239) என்னும் கல்வெட்டை தங்கியுள்ளது.
மூன்றாம் ராஜராஜனிடமிருந்து (1216 - 1260) சோழ வளநாட்டை கைப்பற்றி மீண்டும் அவர்களிடமே திருப்பி கொடுத்திருக்க வேண்டும் இக்கல்வெட்டு சான்றுறைகின்றது.
மூன்றாம் ராஜராஜனிடமிருந்து (1216 - 1260) சோழ வளநாட்டை கைப்பற்றி மீண்டும் அவர்களிடமே திருப்பி கொடுத்திருக்க வேண்டும் இக்கல்வெட்டு சான்றுறைகின்றது.
கருவறையில் அப்பக்குடத்தான் "வா" என்று அழைக்கும் தோரணையில் பள்ளி கொண்டுள்ளார், அதற்கு அடுத்து அர்த்த மண்டபமும், பல தூண்களையுடைய மகா மண்டபமும் கொண்டுள்ள இக்கோயில்...
முதல் சுற்றில் கருவறையை சுற்றி அகழி போன்ற ஒரு அமைப்பு , அதற்கு அடுத்து உள்ள பாதையில் மண்டபம் போன்ற அமைப்பில் சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்றில் தென்மேற்கில் கமலவல்லி தாயார் அப்பக்குடத்தானையே பார்த்துக்கொண்டிருக்குமாறு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். அப்பக்குடத்தான் கருவறையும், கமலவல்லி தாயாரின் கருவறைகள் சிறிய அளவிலும், மற்றபடி இந்த கோயிலில் விசாலமான காலியிடங்கள் ஆற்றில் வெள்ளம் அதிகமாக வந்து ஊரைச்சூழும் பொழுது, மக்கள் வந்து தங்குவதற்காகவே அமைக்கப் பட்டிருக்கின்றது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

கருவறை கோபுரத்தைச் சுற்றியுள்ள அகழி போன்ற அமைப்பை தவிர, இந்த இரண்டு சுற்று சுவர்களைக் கொண்டுள்ள கோயில் முழுமையாக மேல்தளம் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிருந்து கிளம்பி கிழக்கு நோக்கி காவிரிக்கரையை ஒட்டியபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது.
பயணத்தில் பாதை தவறியது, பரவசம் கூடியது , மீண்டும் அதே காரணம்தான் , காவிரி மற்றும் கொள்ளிடம் கரையின் வனப்பு. நெற்பயிர்கள் மற்றும் கமுகு தோப்புகளுக்கு அதிகப்படியான ஊட்டத்தை தந்து மிக வளமாக ஆகியுள்ளது இந்த அழகியநதிகள். இரண்டு ஆறுகளுக்கு இடையில் மண் மேடாக உள்ள இடத்தில் ஒரு கார் மட்டுமே சற்று தாராளமாக செல்லக்கூடிய ஒரு பாதையில் பயணித்துக்கொண்டிருந்த போது சில வித்தியாசமான அனுபவங்களை பெற முடிந்தது. அதாவது கதைகளில் கண்ட வர்ணனையை நேரடியாக காணும் பாக்கியம் அன்று கிடைக்கப்பெற்றது . அன்று முழு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு சென்றிருந்தாலும் , குறிப்பாக இந்த இடத்தின் இயற்கை வனப்பு எங்களை வெகுவாக கவர்ந்தது.
கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள ஒரு சில மரங்கள் ஐந்து ஆறு பேர் ஒன்றாக நின்று கைகோர்த்து அனைத்தாலும் அனைக்க முடியாதபடி பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது. என்னதான் குரலில் சற்று கரகரப்பு இருந்தாலும், அந்தக் குரல் யாருடையது என்பதை நம் மனதில் பதித்த பின்பு அந்த குரலின் கரகரப்பு தன்மை மறந்து , உருவத்தின் இனிமைதான் நம் மனதில் நிழலாடும். அத்தகைய கரகரப்பு குரலும் வசீகரிக்கும் அழகும் கொண்ட பல மயில்களையும் இந்த இடத்தில் நம்மால் காண முடிந்தது.
இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டே முகம் முழுவதும் புன்னகையோடு, ஒரு சிறு பாதையின் வழியாக சென்றால் தென்னை மரங்கள், கத்தரிச் செடிகள் , வாழை மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் சிறிய இடைவெளியில் மிகவும் அழகாக திருச்சடைமுடியுடைய மகாதேவர் திருக்கோயில் முழு கற்றளியாக அமைந்துள்ளது. இக்கோவில் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கல்வெட்டுகளை தங்கியுள்ளது.
மகா சிவபக்தனான "தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மனின்",(825 - 850 ) மனைவி "கண்டன் மாறன் பாவை" அளித்த நிவந்த கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகின்றது .
"மதுரை கொண்ட கோப்பரகேசரி" மற்றும் "மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி" (907 - 955 ) என்னும் பட்டங்களை உடைய "முதலாம் பராந்தக சோழனுடைய" பல்வேறு கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றது. பராந்தகன் தேவியின் பழுவேட்டரையர்களின் மகளுமான அருள்மொழி நங்கை என்பவளின் பரத்தை சேர்ந்த ஒருவர் இந்தக் கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதற்கு 16 கழஞ்சு பொன் நிவந்தம் அளித்துள்ளார். "திருப்பேர்நகர் பிரம்மதேயத்தின் வடபுறத்துப்
பிடாகையான திருச்சென்னம்பூண்டியிலுள்ள திருக்சடைமுடியுடைய மகாதேவர்" என்று ஒரு சோழர்கால கல்வெட்டு கூறுவதன் மூலம் இந்த ஊர் கோவிலடியைச் சார்ந்த ஒரு சிற்றூராக நாம் கருதலாம்.
பிடாகையான திருச்சென்னம்பூண்டியிலுள்ள திருக்சடைமுடியுடைய மகாதேவர்" என்று ஒரு சோழர்கால கல்வெட்டு கூறுவதன் மூலம் இந்த ஊர் கோவிலடியைச் சார்ந்த ஒரு சிற்றூராக நாம் கருதலாம்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற இந்த திருக்கோவில்( வைப்புத் தலம் என்ற ஒரு கருத்தும் உண்டு) பல்லவர் காலத்தில் செங்கல் கற்றளியாக இருந்து சோழர்கள் காலத்தில் கருங்கல் கற்றளியாக மாற்றப்பட்டு இருக்கவேண்டுமென்று இங்குள்ள கட்டுமானங்களைக்கண்டு எளிதில் அறியலாம். அதுமட்டுமல்லாமல் மிகச் சிறப்பு வாய்ந்த "குடக்கூத்து", தேவிமாஹாத்மியம்,சிவன் திருவிளையாடல்கள் மற்றும் ராமாயணத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகளை அழகிய
குறுஞ்சிற்பமாக சுற்றுச்சுவரின்
உபபீடத்தில் அமைத்துள்ளனர்.
குறுஞ்சிற்பமாக சுற்றுச்சுவரின்
உபபீடத்தில் அமைத்துள்ளனர்.
கருவறையில் மஹாதேவர், அதற்கடுத்து நான்கு அழகிய தூண்களையுடைய மண்டபமும் மட்டுமே காணப்படுகின்ற இந்த கோவிலுக்கு நேர் எதிரே நந்தி ஒன்றும் உள்ளது. கோஷ்டத்தில் சிதிலமடைந்த வீணை நாதரும், புன்னகையுடன் கூடிய நான்முகனும் காணப்படுகின்றனர்.
இத்தகைய இயற்கைழகு , வரலாற்றுப் பின்னணி,அறிய குறுஞ்சிற்பங்கள் மற்றும் பக்திமார்கத்திலும் முக்கியத்துவம் பெற்றதுமான இந்த திருக்கோயிலிலிருந்து கிளம்ப மனமில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்......
No comments:
Post a Comment