குடந்தை , மரபு நடைக்கு முன்னால் - 4
கோவில் தேவராயன் பேட்டை மற்றும் திருநல்லூர்
குடந்தை நகரை விரைவாக சென்றடையும் குதூகலத்துடன் சென்று கொண்டிருக்கும் குடமுருட்டி ஆற்றின் தென் புறத்தில் அமைந்துள்ளதும், தன் பெயரிலேயே கோவிலை வைத்துள்ளதுமான ஊர்
"கோவில் தேவராயன் பேட்டை" .
"கோவில் தேவராயன் பேட்டை" .
திருச்சேலூர் என்று திருத்தொண்டர்த் தொகையில் சேக்கிழாரால் கூறப்படும் இந்தக் கோயில் தேவார வைப்புத் தலமாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலின், வெளிச் சுற்று சுவருக்கு உள்ளே நுழையும்பொழுது, இரண்டு பக்கத்திலும் பசுமையான நந்தவனங்களும் , அதைக் கடந்து செல்லும் பொழுது பாதாள நந்தியும், கொடிமரமும் பலிபீடமும் உள்ளது. இதை கடந்து செல்லும்போது வலதுபுறத்தில் குந்தளாம்பிகை அம்மன் தனி சன்னதியில் தெற்கு நோக்கி கோயில்கொண்டுள்ளார் ...
இதற்கு அடுத்து நேராக சென்று அடுத்த சுற்றுக்குள் உள்ளே நுழையும்போது , அருகில் சென்று ரசிக்கும் விதமாக அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலின் முகப்பு மண்டபமும் , மண்டபத்தின் இரு புறங்களில் சிறிய புடைப்பு சிற்பமாக பசு லிங்கத்தை வழிபடுவதும், சேல் என்னும் ஒருவகை மீன் லிங்கத்தை வழிபடுவதுமாக அமைத்துள்ளனர்......
அழகிய தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தை கடந்து அர்த்த மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்தியையும் , அர்த்த மண்டபத்தின் வாயிலில் அருகே சற்றே வித்தியாசமான துவார பாலகர்களையும் காணலாம்.
சற்று பெரியதாகவே ,வேலைப்பாடுகளும் கூடிய நான்கு தூண்களைக் கொண்ட இந்த அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் மச்சபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்து லிங்க ரூபமாக காட்சி அளிக்கிறார்.
சற்று பெரியதாகவே ,வேலைப்பாடுகளும் கூடிய நான்கு தூண்களைக் கொண்ட இந்த அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் மச்சபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்து லிங்க ரூபமாக காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோயிலின் கர்ப்ப கிரகத்தை சுற்றி உள்ள சுற்றுப்பாதையில் உள்ள கோஷ்டத்தில் வித்தியாதரர்கள் குடைபிடிக்க , பத்ம பீடத்தில் அமர்ந்து ஒரு கையில் மோதகமும், மறுகையில் உடைந்த தந்தத்தையும் வைத்துக் கொண்டுள்ள தொந்தி கணபதியும் ,அருகே கல்லால மரத்தடியில் அமர்ந்து உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். கோஷ்ட்டத்திற்கு எதிர்திசையில் சப்த கன்னிகளும், நால்வரும், சிம்மவிஷ்ணு சிலையும், காசிவிஸ்வநாதர் ரூபமும் காணப்படுகின்றது...
மேற்கு நோக்கியவாறு மகாவிஷ்ணுவும், வடக்கு நோக்கியவாறு அழகே உருவான துர்காதேவி மற்றும் பிரம்ம தேவனும் கோஷ்டத்தில் வீற்றிருக்கின்றார்கள்....
இந்தச் சுற்றில் தென்மேற்குப் பகுதியில் நர்த்தன கணபதி, ஐயப்பன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், சரஸ்வதி மற்றும் கஜலக்ஷ்மி சிறுசிறு சன்னதிகளில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.
இந்தச் சுற்றில் தென்மேற்குப் பகுதியில் நர்த்தன கணபதி, ஐயப்பன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், சரஸ்வதி மற்றும் கஜலக்ஷ்மி சிறுசிறு சன்னதிகளில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.
மூலஸ்தான கோபுரத்தின்
பிரஸ்தாரத்தை கீழே பூத வரிசையும், மேலே யானை மற்றும் யாழி வரிசைகளால் அழகு படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாத சுவரில் காணப்படும் தூண்களும் கண்ணைக் கவரும் விதத்தில் வடிவமைத்துள்ளனர்.......
பிரஸ்தாரத்தை கீழே பூத வரிசையும், மேலே யானை மற்றும் யாழி வரிசைகளால் அழகு படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாத சுவரில் காணப்படும் தூண்களும் கண்ணைக் கவரும் விதத்தில் வடிவமைத்துள்ளனர்.......
இராஜகேசரி சதுர்வேதி மங்கலம் என்னும் இந்த ஊரில் முதலாம் ஆதித்தன் (871 - 907),
முதலாம் பராந்தகன் (907 - 955), சுந்தரசோழன் (955 - 973), உத்தமசோழன் (973-985 ) ஆகியோர்களின் நிவந்த கல்வெட்டுகள் காணப்படுவதோடு,
பாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலன்(956 - 973 ) நிவந்த கல்வெட்டுகளும், ஆதித்யா வாய்க்கால் அமைக்க அளித்த நிவந்த கல்வெட்டுகளும் உள்ளது,
கல்வெட்டுகளில் இங்குள்ள இறைவன் பெயர்
திருச்சேலூருடைய பரமேஸ்வரர் என்று வழங்கப்படுகின்றது .

உத்தம சோழரின் பதினோராவது ஆட்சி ஆண்டில் வாத்தியக்காரர்களுக்காகவும், நந்தா விளக்கு ஏற்றுவதற்காகவும் நான்கு மா ( 40000 சதுர அடி அதாவது ஒரு ஏக்கருக்கு சற்று குறைவாக) நிலதானத்தை 'மதுராந்தக தெரிஞ்ச கைக்கோளர்' அளித்துள்ளனர்.
கண்டராதித்த மதுராந்தக உத்தம சோழரின் உடல் நலத்திற்காக இவரை "திருவயிறு வாய்த்த உடைய
பிராட்டியார் " ( செம்பியன்மாதேவி) மாதம் தோறும் 108 குடம் தூய நீர் கொண்டு இறைவனுக்கு வழிபாடு நிகழ்த்த நிலமும் , மேலும் மாமன்னர் ராஜராஜனுடைய
(985 - 1014 ) ஒன்பது மட்டும் பன்னிரண்டாவது ஆட்சியில் வெள்ளித்தட்டு ,வெண்கல விளக்கு தண்டும், மற்றும் ஒரு தங்கக் குடமும் நன்கொடையாக வழங்கியுள்ளர்.

தஞ்சையில் இருந்த திருபுவன மாதேவி பேரங்காடியின் தத்தன் சீலன் என்ற வியாபாரியின் மனைவி இக்கோவிலுக்கு விளக்கெரிக்க ராஜேந்திர சோழரின் இரண்டாம் ஆட்சியாண்டில் நிபந்தம் அளித்துள்ளார் மேலும் ராஜராஜனுடைய தமக்கை பராந்தக குந்தவை நாச்சியார் தஞ்சை சுந்தரசோழ ஆதுர சாலை செலவிற்காக , இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்து மகா சபையினரிடம் நிலங்களையும், வீடு கட்டுவதற்குறிய மனையும் வாங்கி அதிலிருந்து வரும் வருமானத்தை ஆதுரசாலைக்கு பயன்படும் முறையில் ஏற்பாடுகள் செய்துள்ளதமையை கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
'அரசியல் ஆதாயம்' என்றால் மக்கள் நலன் என்பதை மறந்து அரசியலில் ஆதாயம் தேடும் பல ஆட்சியாளர்களை கண்டே பழக்கப்பட்டுப் போன நமக்கு ,
சோழ இளவரசியான குந்தவை நாச்சியார் மக்களுக்காக ஆதுர சாலைகளை அமைத்து தன் சொத்துக்களை அதற்காக பயன்படுத்தினார் என்பது ஆச்சரியத்தை தந்தாலும் மக்கள் நலனே பெரிதாக
வாழ்ந்த அந்த காலகட்டத்தில் இது சாதாரணமாகவே இருந்திருக்கும்......

அழகிய நந்தவனத்தின் நடுவே கற்றளியில் அமர்ந்திருக்கும் திருச்சேலூருடைய மகாதேவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பி கிழக்கே சற்று தொலைவில் அமைந்துள்ள நல்லூர் என்ற ஊரை அடைந்தோம்......
திருநல்லூர்
என்ன ஒரு பிரம்மாண்டமான குளம் ஏறக்குறைய 300 அல்லது 400 அடிக்கு மேல் சதுரவடிவில் அமைந்திருக்கும் என்று அனுமானிக்கிறேன் . நாங்கள் சென்ற போது தண்ணீர் இல்லை இப்போது நிரம்பி இருக்கும் என்று நம்புகிறேன்.
குளத்திற்கு மேற்கே 5 நிலை, 7 கலசங்கள் கொண்ட கோபுரத்தின் ஊழி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நுழையும் பொழுது இடது புறத்தில் அதிகார நந்தி ஒரு கையில் மானும் , ஒரு கையில் மழுவும் கொண்டு இறைவனை வணங்கும் விதத்திலும் அழகிய சிலை ஒன்றை காண்கிறோம்.
கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்ததும் , கிழக்கு நோக்கி மகாகணபதி தனி சன்னதி ஒன்றும், அதற்குப்பின்னால் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் போன்றவற்றை அமைத்துள்ளனர்.
கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்ததும் , கிழக்கு நோக்கி மகாகணபதி தனி சன்னதி ஒன்றும், அதற்குப்பின்னால் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் போன்றவற்றை அமைத்துள்ளனர்.
இந்தச் சுற்றின் தெற்கு புறத்தில் வடக்கு நோக்கி அமர்ந்தவாறு அஷ்டபுஜ காளி தனி சன்னதி ஒன்று உள்ளது. மேலும் மேற்குப் புறத்தில் நன்கு வளர்ந்த மரங்களை கொண்ட வனம் காணப்படுவதோடு, ஒரு கோபுர வாயிலும் உள்ளது.
மூன்று நிலை கோபுரத்தை கொண்ட அடுத்த சுற்றுக்குள் நுழையும் பொழுது இடது புறத்தில் சிவனின் பல லிங்க ரூபங்களும், அதற்கு அடுத்து நால்வர் சிலையும், அமர்நீதி நாயனார் அவர்களின் சிலையும், அடுத்து 63நாயன்மார்கள் சிலையும் காணப்படுகின்றது . இதே சுற்றில் மேற்குப் புறத்தில் கணபதி, வள்ளி தெய்வயானை முருகன் சன்னதியும், அதற்கு அருகே காலஹஸ்தீஸ்வரி மற்றும் கஜலட்சுமி காணப்படுகின்றனர். இந்த சுற்றில் வடக்குப் புறத்தில் சிவனின் பல்வேறு ரூபங்கள் சுதை வடிவில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ளது, அதற்கு அடுத்தாற்போல் மங்கையர்கரசி மற்றும் அமர்நீதி நாயனாரின் சிலைகளும் , மங்கையர்க்கரசி சிலையும் அமைந்துள்ளது.
இப்பொழுது தான் இந்த கோயிலின் உண்மையான பயன்பாட்டை அறிய உதவும் அடுத்த சுற்றுக்குள் செல்கின்றோம், ஏறக்குறைய 25 படிகளைக் கொண்ட அழகிய மாடக்கோயில் இது , முற்காலத்தில் வாழ்ந்த கோச்செங்கட்சோழன் என்பவரால் கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்று . குடமுருட்டி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கோயில் மழைக் காலங்களில் வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது,

மேற்கு புறமாக படியில் ஏறி வடக்கில் திரும்பினால் நேராக
கிரி சுந்தரி அம்மனும் , திருப்பள்ளி அறையும், கையில் வஜ்ராயுதம் மற்றும் சூலத்துடன் காணப்படும் உலோகத்திலான முருகர் சிலை மற்றும் துலாபாரம் காணப்படுகின்றது. மேலும் இடது புறமாக திரும்பி சற்று படிகள் ஏறிச் சென்றால், சிறிய அளவிலான கருவறையும் அர்த்த மண்டபமும் , இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டு, சுற்றி வருவதற்கு சுற்றுப்பாதை ஒன்றை அமைத்துள்ளனர் .

கர்ப்பகிரகத்தில் அமைந்துள்ள சிவலிங்க வடிவம் மட்டுமல்லாமல் , பின்னால் உள்ள சுவற்றில் சுதை வடிவிலான சிவன் மற்றும் பார்வதி தேவியும், இடது புறத்தில் நான்முகனும் , வலதுபுறத்தில் விஷ்ணு மூர்த்தியும் சிவனை வணங்கி நிற்பது போல வடிவமைத்து இருப்பது சிறப்பம்சமாகும்.
மகாமண்டபம் சற்று பெரியதாகவும் ஐம்பது, அறுபது பேர் அமர வசதியாக இடமாகவும் அமைந்துள்ளது.
கோச்செங்கட்சோழன் பற்றிய புராணக் கதைகளை நாம் சற்றே நினைவு கூறும் பொழுது சிலந்தி மற்றும் யானை பற்றி நாம் அறிந்த கதைகள் நினைவுக்கு வருகின்றது.
கதைகள் கற்பனைகளை வளர்க்கின்றன, கற்பனைகள் கலைக்கு வித்திடுகின்றது, கலைகள் காவியங்களை படைக்கின்றன......
அத்தகைய புராணங்களில் நமது சோழ மன்னனின் கதையும் ஒன்றாக இருக்கின்றது....
அத்தகைய புராணங்களில் நமது சோழ மன்னனின் கதையும் ஒன்றாக இருக்கின்றது....
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற இந்த திருத்தலம் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றது. 17 நூற்றாண்டுகளுக்கு மேலான பழமையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு வருவது சற்று மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தக் அழகு மற்றும் சிறப்புகளை வார்த்தைகளால் அடக்கி விட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இந்தக் கோயிலிலும் சோழ மன்னர்களின் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றது. மேலும் கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழரின் காலத்தில் இந்த ஊர் 'பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் ' என்று அழைக்கப்பட்டு இருப்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடிய விரைவில் ஆகும் என்று இந்தக் கோயிலைப் பற்றிய கதையை கேட்டுவிட்டு , சற்று வேகமாகவே கடந்து கொண்டிருந்த நேரத்தை தோற்கடிக்கும் வகையில் நாங்களும் சற்று விரைவாக குடந்தை நகரை அடைந்தோம்.
மரபு நடை சமயத்தில் இரவு தங்குவதற்கான இடத்தை பார்த்து ஏற்பாடுகள், செய்துவிட்டு நாங்கள் தங்கும் அறைக்கு வந்த போது வரலாற்றிலும் சோழத்தின் மீதும் மிகுந்த ஆவலுடைய மற்றுமொரு நபரை சந்தித்தோம்.... அப்பப்பா மிகுந்த வேலை சுமைகளுக்கு நடுவே இவர்களுக்கு சோழத்தின் மீதும் , வரலாற்றின் மீதும் உள்ள ஆவல் சற்றும் குறையவில்லை என்று அதிசயித்தேன். பெரும்பாலும் எங்கள் பேச்சு மரபு நடையை பற்றியே இருந்தது ஏறக்குறைய நான்கு நாழிகைகள் அதைப்பற்றியே பேசிவிட்டு சற்று தாமதமாக இரவு உணவு அருந்தி, உறங்கச் சென்றோம் .......
எத்தனை கோயில்கள் , எவ்வளவு தூரம் பிரயாணம் , எவ்வளவு தூரம் கால்நடையாக சென்றோம், களைப்பு நம்மை வாட்டி எடுக்க , படுத்தவுடன் உறங்கி இருக்க வேண்டும்,ஆனால் உறக்கம் வரவில்லை.....😞😞 காரணமும் மேலே குறிப்பிட்ட விஷயமே தான்.
உடலுக்கு உடனடியாக ஓய்வு கொடுக்க முடிந்தாலும் மனதுக்கு கொடுக்க முடிவதில்லை. படுத்தவுடன் , மகேந்திர பல்லவரும், முத்தரையர்களும், பராந்தக சோழரும், ஆதித்த சோழரும், கோச்செங்கட் சோழரும், மதுராந்தக உத்தம சோழரும், செம்பியன்மாதேவியும், குந்தவை நாச்சியாரும், ராஜராஜ சோழரும், கங்கை கொண்ட ராஜேந்திர சோழரும், சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழரும், புடைப்புச் சிற்பங்களும், குறுஞ்சிற்பங்களும், அழகிய சிலைகளும், கோஷ்ட தெய்வங்கள், கொள்ளிடம் ,காவேரி, அரசலாறு, குடமுருட்டி, மண்ணியாறு போன்ற ஆறுகளும், சாலையில் அமைந்திருந்த வேகத்தடைகளும் , அடிக்கடி குறுக்கே வந்து சென்ற இருசக்கர வாகனங்களும் , மனதில் சற்றும் இடைவெளி இல்லாமல் வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்ததால் புரண்டு புரண்டு படுக்க முடிந்ததே தவிர நித்திரை கொள்ள முடியவில்லை.
பதிவு நீண்டு கொண்டே சென்றாலும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் , இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கும்பொழுது நமது அன்பு எழுத்தாளர் என் அறைக்கு வந்தார், அவரிடம் ஒரு சில சந்தேகங்கள் கேட்டேன் . அப்போதுதான் தெரிந்தது எனக்கு மட்டுமல்ல வரலாற்றின் மீது காதல் கொண்ட அனைவரும் அதைப் பற்றி பேசும் பொழுது காலநேரம், இடம் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள் என்று , ஏறக்குறைய ஒரு நாழிகை முழுக்க அந்த கேள்விக்கு பதில் கூறினார் முத்திரைகளைப் பற்றி.... அந்த நண்பரின் சரித்திர வேட்கையை என்னவென்று சொல்வது....🙂🙂
மூன்றாம் ஜாமம் தொடங்கி இரண்டு நாழிகையில் உறங்கினோம் என்று நினைக்கின்றேன் அடுத்த நாள் குடந்தையில் இருக்கப் போகிறோம் என்ற பரவசத்துடன்........🙂🙂🙂🙂
No comments:
Post a Comment